மல்லீச்வரனே
மல்லீச்வரனே மாதொருபாகனே…..
பல்லவி
மல்லீச்வரனே மாதொருபாகனே
தில்லை நடராஜனே உன் மலர்ப் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
செல்வமே சிவனே கேசவன் நேசனே
பொல்லாத் திரிபுரனை எரித்த முக்கண்ணனே
சரணம்
நல்லடியார் நால்வரைப் போலவே நானுமுன்னை
சொல்லால் பாடி மனமாரத் துதித்திடும்
நல்லருள் தருவாயென நாளும் வேண்டியே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
No comments:
Post a Comment