Sunday, 16 October 2022

தருமமிகு காஞ்சியில்…..

 காமாக்ஷி கல்பவிடபீவ பவத்கடாக்ஷோ

தித்ஸு: ஸமஸ்தவிபவம் நமதாம் நராணாம் |

ப்ருங்கஸ்ய நீல நலினஸ்ய ச காந்திஸம்ப-

த்ஸர்வஸ்வமேவ ஹரதீதி பரம் விசித்ரம் ||98||


कामाक्षि कल्पविटपीव भवत्कटाक्षो

दित्सुः समस्तविभवं नमतां नराणाम्।

भृङ्गस्य नीलनलिनस्य च कान्तिसम्पत्-

सर्वस्वमेव हरतीति परं विचित्रम्॥९८॥

காமாக்ஷியே! உனது கடாக்ஷமானது , கற்பகத் தருபோல், பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் தருகிறது! ஆயின் அது வண்டுகள் மற்றும், கருநெய்தல் மலர்களதுமான எல்லா சொத்தினையும் அபகரித்து விடுவது விந்தையே! அம்பிகையின் கடாக்ஷத்தின்  அனுக்ரஹம் இருந்தால் ஸகலஸெளபாக்கியங்களும் கிடைக்கும் என்றும், அம்பிகையின்  கடாக்ஷமானது காந்தியில் வண்டுகளையும், நீல நளினங்களையும் பழித்ததாவது என்பதும் இந்த வர்ணனையின் தாத்பர்யமாகும்! 


                                       தருமமிகு  காஞ்சியில்…..


                                                பல்லவி

                              தரும மிகு காஞ்சியிலெழுந்தருளிக் காட்சி தரும்

                              பெருமைக்குரிய காமாக்ஷியுனைப் பணிந்தேன்

                                               அனுபல்லவி

                              திருமால் கேசவன் சோதரி நீயே

                              இருவினைப் பயன் தொலைய அருள் புரிவாயே      

                                                      சரணம்                         

                              அருள் மிகு உனது கடைவிழிப் பார்வை

                              கருணை தரும் கற்பக தருவானது பக்தருக்கு

                              இருப்பினும் அவைகள் கருநெய்தல் மலரையும்

                              கருவண்டின் காந்தியையும் பழிப்பது வியப்பே

                                                            

No comments:

Post a Comment