ஒரு நொடி உந்தன்……
பல்லவி
ஒரு நொடி உந்தன் திருவடி நிழலின்
அருளில் நின்றிட வரமருள்வாய் கேசவா
அனுபல்லவி
திருவுறை மணிமார்பா கருணைக்கடலே
அருமறைகள் போற்றும் ஆராவமுதே
சரணம்
தரும நெறி காக்க இம்மாயத்தரணியில்
விருப்பமுடனவதரித்த திரு நாராயணனே
குருவருளும் திருவருளும் எனக்கருளும் திருமாலே
இருவினைப்பயனகல என் ஜென்மம் கடைத்தேற
No comments:
Post a Comment