சிவகாமேச்வரியின்….
பல்லவி
சிவகாமேச்வரியின் மலரடி பணிந்தேன்
சிவகாமேச்வரனின் மனங்கவர்ந்தவளின்
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் சோதரியின்
சிவன் மடியில் வீற்றிருக்கும் பராசக்தியின்
சரணம்
அவனியோர் கண்டு மனம் மயங்கும் சிங்காரியின்
தவயோகியரும் முனிவரும் வணங்கிடும்
புவனேச்வரியின் திரிபுரசுந்தரியின்
குவலயம் போற்றும் சிதம்பரம் தலம் வளர்
No comments:
Post a Comment