'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
கார்முகில் வண்ணனை…..
பல்லவி
கார்முகில் வண்ணனைக் கண்ணனைக் கேசவனை
பார்புகழ் செம்பொன்னரங்கனைப்பணிந்தேன்
அனுபல்லவி
மார்பில் அல்லிமாமலராளைத் தாங்கும்
நான்மறைகள் போற்றும் திருநாங்கூர் தலத்தானை
சரணம்
நேர் நின்று துதித்திடுமடியார்களுள்ளத்தில்
ஊறுகின்றத் தித்திக்கும் தேனாய் விளங்கும்
பேறுடையானைக் களாப்பழ நிறத்தானை
கூறுமடியார்கள் பழவினை தீர்ப்பவனை
No comments:
Post a Comment