சேரகுலவல்லியின்…..
பல்லவி
சேரகுலவல்லியினுடனிருக்கும் கேசவனை
ஆரமுதை அரங்கநாதனைத் துதித்தேன்
அனுபல்லவி
பேராயிரமுடைய பெரிய பெருமாளை
தீராவினை தீர்க்கும் நாராயணனை
சரணம்
நாவிற்கினிய பல நாமங்களுடையவனை
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவனை
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை மணந்தவனை
பெரிய பிராட்டியின் மனங்கவர்ந்தவனை
No comments:
Post a Comment