सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।
हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं
चिरं याचे शंभो तव पदांभोजभजनम्
ஸஹஸ்ரம் வர்தந்தே ஜகதி விபுதா க்ஷுத்ர பலதா:
ந மன்யே ஸ்வப்னே ஸ்வப்னே வா ததனுஸரணம் தத்க்ருத பலம்|
ஹரிப்ரம்ஹா தீ நாமபி நிகடபாஜாம் அஸுலபம்
சிரம் யாசே சம்போ சிவ தவ பதாம்போஜ பஜனம்||
ஏ பரமேஸ்வரா! உலகில் ,அற்பப் பயன்களை அளிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான ,தேவர்கள், இருக்கின்றனர். ஸ்வப்னத்தில் கூட அவர்களை ஜபம் , பஜனை செய்வதையோ,அவர்கள் அளிக்கும் பயனையோ, பெரிதாகக் கருதுவதில்லை.ஆனால் சமீபத்திலேயே இருக்கிற, ஹரி,ப்ரம்மா முதலியவர்களுக்குகூட,மிகவும் அரிதான, தங்களுடைய சரணாரவிந்த பஜனத்தையே வெகு காலம் வரை, வேண்டிக்கொள்கிறேன்
அதாவது மற்ற தேவர்களை விட சிவனே சிறண்தவர் எனக் கருதி அவர் சரணாரவிந்த ப்ச்ஜனத்தை இங்கு சங்கரர் வேண்டிக்கொள்கிறார்.
ஓம் நம: சிவாய
பரமேச்வரனே…..
பல்லவி
பரமேச்வரனே கயிலை நாதனே
பரம் பொருளுனையே சரணடைந்தேனே
துரிதம்
நரர் சுரர் நந்தி கணங்கள் நாரதர்
சுரபதி சுகசனகாதியர் வணங்கிடும்
அனுபல்லவி
வரம் தந்தெனையே ஆண்டருள்வாயென
கரம் சிரம் பணிந்துனை தினமும் துதித்தேன்
சரணம்
அமரரும் அமரேந்திரனுமவர் தரும்
அற்ப அருளெதுவும் நான் வேண்டேன்
அருகிருந்துனைத் துதிக்கும் பிரமனும் கேசவனும்
தரும் கருணை கூட நான் விரும்பி ஏற்றிலேன்
No comments:
Post a Comment