1678.
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ
கண்ணபுரத்தெம்பெருமான்…..
பல்லவி
கண்ணபுரத்தெம்பெருமான் கதிர்முடிமேலிருக்கும்
வண்ணமிகு துளபம் தனிலமர்ந்திருக்கும் வண்டே
அனுபல்லவி
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணதிரில் காட்சிதரும்
தண்மதி முகத்தோன் கேசவனின் புகழ் பாடு
சரணம்
விண்ணாளுமிந்திரனுமமரரும் முனிவர்களும்
மண்ணாளும் மன்னர்களும் எண்ணிலா அடியாரும்
பண்ணிசைத்துப்பாடும் நாரதரும் தும்புருவும்
அண்ணாந்து கரம் கூப்பி அனுதினம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment