அராளகேசியின்……
பல்லவி
அராளகேசியின் மலர்ப் பதம் பணிந்தேன்
கராரவிந்தம் காண்பித்தபயம் தரும்
துரிதம்
சுரபதி ரதிபதி கணபதி மற்றும்
தேவ சேனாபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
சுரா சுரர் பணியும் சுகுண சுந்தரி
பராசக்தி கேசவன் சோதரியின்
சரணம்
சராசரங்களைப் படைத்தும் காத்தும்
பராமரித்திடும் பர்வத குமாரி
முராரி பிரமனீசன் மூவரும்
கரம் பணிந்தேத்தும் திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment