2180 | ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை O Heart! Always worship the lord who wears the coal Tulasi garland, the wonder-child who kicked a cart with his foot, kesava the lord who measured the Earth with his one foot. You can see both his feet on Earth. ஓரடியாலுலகளந்த……. பல்லவி ஓரடியாலுலகளந்த உத்தமர் திருவடி தன்னை கார் வண்ண மேனியனைப் பணிவாயென் நெஞ்சே அனுபல்லவி கோர அரக்கன் கேசியின் கதை முடித்த வீரனைக் கேசவனைத் திருமாலை மாயவனை சரணம் ஈரடியால் சகடாசுரனை வதம் செய்தவனை மார்பினில் தண் துழாய் மாலையணிந்தவனை பூரண நிலவெனப் பொலிவுமழகுடையவனை பாரோர் பணிந்தேத்தும் பரமபத நாதனை |
No comments:
Post a Comment