சிவன் சொல்வது ராமா
ப்ரம்மன் சொல்வது பத்மநாபா
நாரதர் சொல்வது நாராயணா
த்ரொபதி சொன்னது கோவிந்தா
துருவன் சொன்னது வாசு தேவா
பிரகலாதன் சொன்னது ஸீ ஹரி
கஜேந்திரன் சொன்னது ஆதி மூலா
அர்ச்சுனன் சொன்னது அச்சுதா
நம்மாழ்வார் சொன்னது கண்ணா
இராமானுசர் சொன்னது வரதா
ஞானேஸ்வர் சொன்னது இராம கிருஷ்ண
துக்காராம் சொன்னது விட்டலா
ஜெய தேவர் சொன்னது ஜகந்நாதா
சைதன்யர் சொன்னது ஹரே கிருஷ்ணா ஹரே இராமா
நாமும் சொல்வோம் நாளும் நாமா
நாமமே பலம் நாமமே சாதனம்
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
நாமமொன்றே…..
பல்லவி
நாமமொன்றே என்றும் நமக்குத்துணை - கேசவன்
அனுபல்லவி
பூமியில் நலமுடன் நாம் வாழச் செய்திட
காமக்ரோதாதி அறுபகைகள் வென்றிட
சரணம்
தாமரைப்பூவிலமர் பிரமனுரைத்திடும்
மாமறைகள் போற்றும் பத்மநாபனெனும்…….. (நாமமொன்றே…)
சாம வேதம் தனில் மனம் லயித்திடும்
காமனின் வைரி சிவனருளிய ஶ்ரீ ராமனெனும்…(நாமமொன்றே…)
நாரதர் நாவில் தினமுரைத்திடுமந்த
நாராயணாவோ பாஞ்சாலி சொல்லும்
கோவிந்தாவோ துருவன் துதித்திடும்
ஶ்ரீ வாசுதேவனென்னுமழகு….. ( நாமமொன்றே…..)
பக்தன் பிரகலாதன் சொன்ன ஶ்ரீஹரியோ
கஜேந்திரனழைத்த ஆதிமூலமோ
பார்த்தன் விரும்பிய அச்சுதனோ மாதவனோ
நம்மாழ்வார் போற்றிய மாயக் கண்ணனெனும்…(நாமமொன்றே…)
ஞானேச்வரரின் ஶ்ரீ ராமகிருஷ்ணனோ
குரு ராமானுஜர் போற்றிய வரதனோ
ஜெயதேவர் கொண்டாடும் ஜகந்நாதனோ
சைதன்யரின் ஹரே ராம ஹரே க்ருஷ்ண ….( நாமமொன்றே…)
சக்தி தரும் நாம சங்கீர்த்தனமே
முக்திக்கு வழி செய்யும் ஹரிநாம பஜனமே
துக்காராம் தினம் துதிக்கும் ஶ்ரீஹரிவிட்டலனோ
பக்தர்கள் போற்றும் ராமக்ருஷ்ண ஹரியோ….( நாமமொன்றே…)
No comments:
Post a Comment