Wednesday, 2 November 2022

தாமரைநாபனை…….

 தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக் கீழ்க்கொண்ட அவன்..(2204)
-: பூதத்தாழ்வார் :- 
Bowing low with proper respect the lord came in disguise and took the Earth under his feet. He destroyed the wood-apple free throwing a calf against it. He gives life to his devotees.



Bowing low with proper respect the lord came in disguise and took the Earth under his feet. He destroyed the wood-apple free throwing a calf against it. He gives life to his devotees.


தாமரைநாபனை…….


பல்லவி

தாமரைநாபனைத் திருமாலைப் பணிந்தேன்
சாம முதல் வேதங்கள் துதித்துப் போற்றும்

அனுபல்லவி

பாமரரும் வணங்கும் வண்ணம் பூமியிலவதரித்து
சேமமுற அடியார்க்கு நலமருளும் கேசவனை

சரணம்

வாமனனாய் வேறு வடிவெடுத்து மூவலகை
கோமகனார் மாதவன் தன் மூவடியாலளந்து
மாவலியின் கர்வம்தனை தீர்த்தவனை வென்ற
பூமண்டலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனை

No comments:

Post a Comment