அடைக்கலமடைந்தேன்….
பல்லவி
அடைக்கலமடைந்தேன் கேசவனே எனைக்
கடைக்கண்ணருள் வைத்து காத்தருள்வாயே
அனுபல்லவி
இடைக்குலத்துதித்த மாயவனே கண்ணா
படைத்தும் காத்தும் உலகினைக் காப்பவனே
சரணம்
விடை வாகனன் சிவனும் பிரமனும் பணிந்தேத்தும்
பட அரவணை துயிலும் பாற்கடல் வாசனே
குடையாக க்குன்றேந்திக் குவலயம் காத்தவனே
வடமதுரையரசாளும் மதுசூதனனே
No comments:
Post a Comment