Thursday, 3 November 2022

தலங்களுள் சிறந்த…..

 பெரிய திருமொழி(512).....!!!

சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணார்

திறத்தனாய் அறத்தையே மறந்து*

புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப்

போக்கினேன் பொழுதினை வாளா*

அலம்புரி தடக்கை ஆயனே மாயா!

வானவர்க்கரசனே!* வானோர்

நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்

நைமிசாரனியத்துள் எந்தாய்!

பெரிய திருமொழி - 1.6.2

சிலம்புகளைக் கால்களில் அணிந்தவர்களும், கருத்த நீண்ட கண்களை உடைய மாதர்களிடமே மனத்தைச் செலுத்தியதால், தருமத்தை மறந்து அந்த போகத்திலயே காலத்தை வீணாகக் கழித்தேன். பெரும் பயன்களை அளிப்பவனும், ஆச்சர்யமான பல அற்புதமான செயல்களைச் செய்பவனான ஆயனே! தேவதிதேவனே என்று கொண்டாடப் படுபவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனுமான உன் திருவடிகளை வந்து அடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! சிலம்புகளை காலில் போட்டுக்கிட்டு
(நமிதா கணக்கா டான்ஸ் ஆடும்) கறுத்த நீண்ட கண்களையுடைய பெண்களிடமே மனம்
செலுத்தியதால் ஒழுக்கத்தை மறந்தேன். புலன்களால் உண்டான இன்பங்களை பெருக்கி
வீணாக நாட்களை கழித்தேன். சஞ்சலம் உள்ளவர்களுக்கு மனம் நிறைந்து சந்தோசபடும்படி கொடுக்க கூடிய (கொடுத்து கொடுத்து சிவந்த) பெரிய கையப்பா நீ! (என் கண்ணனே!)
மாடுகளை மேய்ப்பவனே! மாயவனே! வானவர்களின் அரசனே! வானத்தில் இருப்பவர்களும் தங்கள் நலனை வேண்டி வணங்கும்உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

Shapely wide-eyed dames wearing anklets drew mw making you and me forget Dharma, Senses suck and devour, giving pleasure for a while, --- I spent all my times in this wasteful manner. O Wonder-cowherd-Lord, bearing a plough in hand, king of the celestial kings, O! Feet that is worshipped, by the Gods in sky above Naimisaraniyam-living Lord, O!

           


                                                                       தலங்களுள் சிறந்த…..


                                                                           பல்லவி                                                                

                                                             தலங்களுள் சிறந்த நைமிசாரணியந்தனில்
                                                             நலமுடமுடன் வீற்றிருக்கும் கேசவனுனைப் பணிந்தேன்

                                                                         அனுபல்லவி

                                                             உலக்கோரும்பர் பணி தேவாதிதேவனே
                                                             கலக்கம் தீர்த்தெனை ஆண்டருள்வாயே

                                                                                சரணம்

                                               நலந்தருமுனையே நாளும் பணியாமல்

                                              சிலம்பணிந்த மாதரார் மயக்கும் கருவிழிகளில்

                                              புலம் பெயர்ந்து வீழ்ந்து கிடந்தேன்

                                              அலமேந்தும் தடக்கையுடைய ஆயர்குலத்தோனே

                                                                                              

No comments:

Post a Comment