சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜுஷதாம்.
अश्वपूर्वां रथमध्यां हस्तिनादप्रबोधिनीम् ।
श्रियं देवीमुपह्वये श्रीर्मा देवी जुषताम् ॥३
श्रियं देवीमुपह्वये श्रीर्मा देवी जुषताम् ॥३
ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவியே, சுகங்களை அருளும் ஈஸ்வரியே, குதிரையில் ஆரோகணித்து வருபவளே, தங்கத்தை அருளும் ராஜலக்ஷ்மியே, குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தின் நடுவே அருளும் காஞ்சிபுர பெருந்தேவி தாயார் வடிவினளே, தங்களை பூஜிக்கும் என்னை கடைக்கண் கொண்டு காக்க வேண்டும்.
அடைக்கலமடைந்தேன்……
பல்லவி
அடைக்கலமடைந்தேன் ஶ்ரீமகாலக்ஷ்மியே
கொடை கொற்றம் புகழில் சிறந்தவளுனையே
அனுபல்லவி
தடையின்றிக் கேசவன் மணிமார்பையலங்கரிக்கும்
இடை சிறுத்தவளே தங்கமயமானவளே
சரணம்
மடை திறந்த வெள்ளமென புரவி பூட்டிய தேரேறி
குடையெனக் குன்றேந்திய வரதன் துணைவியாய்
படைநான்கும் நடத்துமன்னை ராஜலக்ஷ்மியே
கடைக்கண் வைத்தெனையே காத்தருள வேண்டினேன்
No comments:
Post a Comment