வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே
இளையோன் முருகனின்……
பல்லவி
இளையோன் முருகனின் மலர்ப்பதம் பணிந்தேன்
விளையாடல் பல புரிந்த வெற்றி வேலாயுதன்
அனுபல்லவி
துளைக்கருவிக் குழலூதும் கேசவன் மருகன்
களை சொட்டும் முகமுடைய சிங்கார வேலன்
சரணம்
வளைக்கரத்தாள் மனை மக்கள் சுற்றமென்ற
தளைநீக்கி யருளவும் தொளைபட்டூடுருவியுன்
வளையா கைவேல் சூரபத்மனின்
கிளைகளைக்களைந்தழித்திடவும் செய்த
No comments:
Post a Comment