கண்டவர் மனம்….
பல்லவி
கண்டவர் மனம் களிக்கச் செய்திடுமன்னையை
தண்மதி முகத்தாளைக் காமாக்ஷியைப் பணிந்தேன்
அனுபல்லவி
வெண்ணிலவின் பிறையணிந்த கேசவன் சோதரியை
அண்ட சராசரங்களையாண்டருளுமீச்வரியை
சரணம்
விண்ணுலகோரனைவரும் அயனரனரியும்
மண்மகளும் கலைமகளும் கரம் பணிந்தேத்தும்
பெண்ணணங்கைப் பேரழகை காஞ்சிநகர் வஞ்சியை
தொண்டர் மனத்துறையும் சிவபெருமான் நாயகியை
No comments:
Post a Comment