பங்கயக் கண்ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ? அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ? செங்கதிர் முடியன் என்கோ? திரு மறு மார்வன் என்கோ?
சாதி மாணிக்கம் என்கோ? சவி கொள் பொன் முத்தம் என்கோ?
Or shall I call him flawless Gem-Lord of lotus eyes? Or coral lips?, or Lord with radiant feet? or dark hued Lord of red radiant clown? or bearer of discus and conch?, or the one with Lakshmi-mole on his chest?
பங்கயநாபனுன்னை……
பல்லவி
பங்கய நாபனுன்னை என்னவென்று சொல்லியழைப்பேன்
பொங்கரவணை துயிலும் திருமாலே கேசவனே
அனுபல்லவி
அங்கமில் மதனைப் படைத்த அழகனே மதுசூதனனே
சிங்காரம் கொஞ்சுமுன்னை வர்ணிக்க வார்த்தையில்லை
சரணம்
பங்கயக் கண்ணனென்றோ செம்பவள வாயனென்றோ
செங்கண் மாலவனென்றோ செந்நிற முடியோனென்றோ
சங்கு சக்கரக் கையனென்றோ திங்கள் திருமுகத்தானென்றோ
கருமை நிறத்தானென்றோ திருவுறை மார்வனென்றோ
No comments:
Post a Comment