நாகலிங்கம்….
பல்லவி
நாகலிங்கம் பாதம் பணிந்தேன்
நாகராஜன் போற்றித் துதித்த
அனுபல்லவி
பாகம்பிரியாள் கமலாம்பிகையுடனுறை
ஆகம வேத சாரப் பொருளான
சரணம்
மோகினி வடிவெடுத்துக் கேசவன் கூடிய
சேகரனை சிவனை புற்றிலுறைபவனே
சாகசங்கள் பல புரிந்த சங்கரனை
திருவாரூர் தலம் வளர் வன்மீகநாதனை
No comments:
Post a Comment