Tuesday, 22 November 2022

பற்றினேன்……


यत्रैव यत्रैव मनो मदीयं तत्रैव तत्रैव तव स्वरूपम् ।
यत्रैव यत्रैव शिरो मदीयं तत्रैव तत्रैव पदद्वयं ते ॥११०

எங்கெங்கெல்லாம் என்மனம் செல்கிறதோ அங்கெல்லாம் உனது ஸ்வரூபம் தெரியவேணும். எங்கெல்லாம் என் சிரஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் உனது திருவடி அமைய வேணுமே.

பெற்றோரோ,உற்றாரோ,
மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,

பணமோ ,என் அறிவோ, என்னைக் கடைதேற்றவல்ல துணையல்ல;

கதிநீயே ! கதிநீயே ! தாயே !பவானி 

" ஆபத்து காலத்தில் அம்பிகையின் சரணாரவிந்தங்களை பற்றிக்கொள்ளுங்கள் " என்கிறார்
ஶ்ரீ மத் ஆதிசங்கர பகவத்பாதர் .


யத்ரைவ யத்ரைவ மனோமதீயம் 

தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம்

யத்ரைவ யத்ரைவ சிரோ மதீயம்

தத்ரைவ தத்ரைவ பதத்வயம் தே !

எங்கெங்கெல்லாம் என்மனம் செல்கிறதோ அங்கெல்லாம் உனது ஸ்வரூபம் தெரியவேணும். எங்கெல்லாம் என் சிரஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் உனது திருவடி அமைய வேணுமே.

பெற்றோரோ,உற்றாரோ,

மணங்கொண்ட துணையோ,

நான் பெற்ற மக்களோ,

பணமோ ,என் அறிவோ,

என்னைக் கடைதேற்றவல்ல துணையல்ல;

கதிநீயே ! கதிநீயே !

தாயே !பவானி 

ஆபத்து காலத்தில் அம்பிகையின் சரணாரவிந்தங்களை பற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்

ஶ்ரீ மத் ஆதிசங்கர பகவத்பாதர் .

ஆபத்கால மட்டுமின்றி தேவியின் பதமலர் நித்தமும் பற்றிக்கொண்டு இருப்பவர்கள் , பூவுலகின் முடிவில் மோக்ஷமடைந்து ஶ்ரீபுர நாயகியின் மலர்த்தாளில் வாழ்வர் ..



                                 பற்றினேன்……


                                     பல்லவி

                         பற்றினேனுன் பதம் திரிபுரசுந்தரி

                         மற்றெதுவும் வேண்டேன் உன் நிழலே போதும்

                                  அனுபல்லவி

                         குற்றம் குறை ஏதுமிலாக் கேசவன் சோதரி

                         சற்றே உன் கடைவிழி என் மீது விழவே    

                                      சரணம்                   

                         எங்கெங்கு எங்கெங்கு நான் சென்ற போதும்

                         அங்கங்கு அங்கங்குன் திருவடி நிழல் வேண்டும்

                         பெற்றாருமுற்றாரும்  மணம் கொண்ட நாயகனும்

                         பெற்றவரும் துணையல்ல உற்ற துணை நீயே


No comments:

Post a Comment