பிறையணிந்த……
பல்லவி
பிறையணிந்த சிவனின் மலரடி பணிந்தேன்
கறை பிறவிப் பிணி தீர அவனருள் வேண்டியே
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் நேசன்
மறைகள் போற்றும் மகாதேவனெனும்
சரணம்
கறை கண்டனெனும் பெயர் கொண்ட ஈசன்
இறைவரும் பணிந்தேத்தும் அகிலாண்டேச்வரன்
வரையறையில்லாத முழுமுதற் கடவுள்
சிறையுடல் களைந்து அவன் தாள் சேர்ந்திட
No comments:
Post a Comment