கட்டிக்கரும்பே..தேனே...கற்கண்டே,மாசறு பொன்னே,தெம்மாங்குத்தென்றலே,
கிட்டி வந்தவர் தமைக்குளிர்விக்கும்கடலலையே! .கட்டுக்கடங்காத கருணைவெள்ளமே
எட்டு திக்கிலும் எழில் வீசும் வீசும் இலங்கொளியே! பண்டரி புரத்து நல்முத்தே நந்தாவிளக்கே!
ரங்கா..ரங்கா! பாண்டு ரங்கா
விட்டலனுனையே…..
பல்லவி
விட்டலனுன்னையே என்ன சொல்லியழைப்பேன் ( பாண்டுரங்க…)
மட்டிலா மகிழ்ச்சி தரும் மாதவனே கேசவனே
அனுபல்லவி
கிட்ட வந்து பணிந்திடுமடியார்க்கருள்பவனே
சுட்ட செங்கல்மீது நின்று காட்சியளிப்பவனே
சரணம்
கட்டிக் கரும்பென்றோ தெவிட்டாத தேனென்றோ
அட்டாலும் சுவை குன்றாப் பசுவின் பாலென்றோ
கட்டுக்கடங்காத கருணை வெள்ளமென்றோ
மட்டவிழ் மலரென்றோ மாமறைப் பொருளென்றோ
எட்டுதிக்குமொளிவீசும் அழகிய ஒளியென்றோ
எட்டாத கனியென்றோ ஏழிசை நாதமென்றோ
வட்ட நிலவைப் பழிக்கும் வண்ணமுகமென்றோ
பட்டாடையணிந்து நிற்கும் பண்டரிபுரத்தரசே
No comments:
Post a Comment