தன்வந்திரி பெருமாள் திருவடிகளே சரணம்.....!!!
வெள்ளை வேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்*
அள்ளலாக்கடைந்த அன்று அருவரைக்கு ஒராமையாய்*
உள்ள நோய்கள் தீர்மருந்து வானவர்க்கு அளித்த* எம்
வள்ளலாரை அன்றி மற்றொர்தெய்வம் நான்மதிப்பனே.
ஸ்ரீதிருமழிசையாழ்வார் ♦ திருச்சந்தவிருத்தம் (88)
வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே மந்தரமலையை நட்டு
வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
(கடைகயிறாகச்) சுற்றி அலைகள் செறியும்படி
(கடலைக்) கடைந்தருளின காலத்தில் தாங்க முடியாததான அம்மலைக்கு (தாரகமான) ஒரு ஆமையாகி
தேவதைகளுக்கு ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை (கடலிற் கடைந்தெடுத்து) அருளின உதாரனான எம்பெருமானை அன்றி வேறொரு தேவதையை நான் (ஒருபொருளாக) மதிப்பனோ! வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து, தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.
வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து, தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.
English Translation
I praise the Lord benevolent; — He came as turtle in the yore to bear the burden of a rock, to churn an ocean full of milk. With Vasuki the serpent as a churning rope on Meru mount, He gave ambrosia to the gods, — now how can I, another god?
தந்திரமாயமுதெடுத்து…..
பல்லவி
தந்திரமாயமுதெடுத்து அமரருக்களித்தவனை
உந்தி கமலனைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
சந்ததமனைவரும் கரம் பணிந்தேத்தும்
விந்தை மருத்துவனை தன்வந்திரிப் பெருமானை
சரணம்
மந்தர மலையை மத்தாக வைத்து
பந்திக்கும் கயிராக வாசுகியின் துணை கொண்டு
சுந்தரன் கூர்மமாயதைத் தாங்கிப் பாற்கடலை
யந்திரம் போல் கடைந்து நோய் தீர்க்கும் மருந்தாக
No comments:
Post a Comment