முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.
திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் -- திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?
உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?
தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)
உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்
திருமகளைத் திருமார்பில்……
பல்லவி
திருமகளைத் திருமார்பில் தாங்குகின்ற மாதவனே
திருவடி பணிந்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
தரும நெறிகாக்க தரணியிலவதரித்த
திருமாலே கேசவனே தீன சரண்யனே
சரணம்
திருமுகம் தருமொளியால் நீயணிந்த உந்தன்
திருமுடி மணிமகுடம் ஒளிபெற்றுத் திகழ்கிறதோ
திருவடி ஒளியால் தாமரை பொலிவுற்றதோ
திருமேனி சோதியாலுன் பட்டாடை மிளிர்ந்ததோ
No comments:
Post a Comment