Saturday, 19 November 2022

என் மனத்தாமரையில்….

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 🙏🏻🙏🏻

|| லக்ஷ்மி என்ற பெயரிற்கு ||

வேதங்களில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

சுருக்கமாய், எது நல்லதோ, அதுவே லக்ஷ்மி. 

லக்ஷ்மி கொடுப்பது செல்வம் பணம் மட்டும் அல்ல. 

உலகில் உள்ள அனைத்து வித செல்வத்தையும் தருபவள் ஸ்ரீதேவியே. 

அனைத்து தேவியர்களிலும் முதல் தாயகத் திகழ்கிறாள். 

இவளை தாயார் என்று அன்போடும், பக்தியோடும் பக்தர்கள் அழைப்பார்கள்.

மஹாலக்ஷ்மி ஸ்ரீமந் நாராயணரின் மறு பாதியும், மன நாயகியும் ஆகியவள். 

அவளையும் ஸ்ரீமஹா விஷ்ணுவையும் ஒரு போதும் பிரிக்க முடியாது. 

மனமே அவள் என்று உள்ளார்  ஸ்ரீமன் நாராயணன். 

அவர் வரும் ஒவ்வொரு அவதாரத்தில், அவளும் வருகிறாள். 

ஸ்ரீராம அவதாரத்தில் சீதையாக, ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தில் ராதை மட்டும் அஷ்ட பட்ட மஹிஷிகளாக வந்து, எப்போதும் அவருக்கு துணையாய் வந்தவள் அவளே. 

அனைவருக்கும் அழகிய பாசுரங்களை வழங்கி, நாராயணனே நமக்கே 

பறை தருவான் என்றும் பாடிய ஆண்டாள், பூ லக்ஷ்மியின் ஸ்வரூபமே.

உலகத்தின் பிதாவாக இருப்பது நாராயணர் என்றால், லோக மாதாவாய் இருப்பது லக்ஷ்மி. 

அவர் அக்னி என்றால், அதில் உள்ள ஜ்யோதி லக்ஷ்மியே. 

ஆண் லக்ஷணம் விஷ்ணு, பெண் லக்ஷணம் லக்ஷ்மி (விஷ்ணுவின் மோஹினி ரூபம் பெண் லக்ஷணம் தான்).  அன்பு அவன் என்றால், பக்தி இவள். அவன் ஒரு இடம் சென்றால், பின்னே அவள் வந்து விடுவாள்.  விஷ்ணு இருக்கும் அனைத்து இடத்திலும், லக்ஷ்மி எப்போதும் வசிப்பாள்.  லக்ஷ்மி இருந்தால் மட்டுமே,  ஸ்ரீமஹா விஷ்ணு வருவார். வேதங்களிலும், புராணங்களிலும், ஷ்ரியா என்று கொண்டாடப்படும்  ப்ரஹ்ம ஸ்வரூபிணியான  ஸ்ரீமஹா லக்ஷ்மி,  ஸ்ரீமந் நாராயணரோடு,  அனைவரின் மனதில்,  என்றும் வாழ்ந்து அரவணைக்கட்டும்.  



                                                   என் மனத்தாமரையில்….


                                                              பல்லவி

                                       என் மனத்தாமரையில் வீற்றிருக்கும் தாயாரை

                                       பன் முகம் கொண்ட திருமகளைத் துதித்தேன்

                                                               அனுபல்லவி

                                       பொன்னுருவானவளை கேசவன் நாயகியை

                                       சென்னியில் சீரடி வைத்த அலைமகளை

                                                                   சரணம்

                                       மன்னனவனணி மார்பை நீங்காதிருப்பவளை

                                       மறையனைத்தும் போற்றும் மகாலக்ஷ்மியை

                                       இறையனைத்துக்கும் மேலான இறைவியை

                                       கறைகண்டனுடனிருக்கும் சிவை வணங்கும் தேவியை


                                       கண்ணனுக்கு ராதையாய் பாவை பாடிய கோதையாய்

                                       வண்ணமிகு ராமனுக்கு வடிவழகி சீதையுமாய்

                                       திண்ணமுற அவதாரமனைத்திலுமுடனிருந்த

                                       பெண்ணணங்கைப் பேரழகைப் பெரிய பிராட்டியை


                                       தீயென விளங்கும் திருமாலின் சோதியாய்

                                       ஓயாமலுலகாளும் தந்தை நாராயணனருகில்

                                       தாயக நின்றருளுமுலக நாயகியை

                                       தேயாத புகழ் மேவும் திருப்பாற்கடல் மகளை

                                       

                                       

                                                                                                                                          

      

No comments:

Post a Comment