Thursday, 17 November 2022

நாதன் பாம்பணையப்பனிடம்

 காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 

வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 

பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*

ஶ்ரீகமலவல்லிதாயார்ஸமேத ஶ்ரீபாம்பணையப்பன்பெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏

காதலுக்குரிய மெல்லிய பேடையோடு உடன் சேர்ந்து மேய்கின்ற அழகிய நாரையே! வேதவேள்விகளின் ஒலி மாறாமல் முழங்கிக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற நாதனும், உலகத்தை எல்லாம் புசித்த நம்பெருமானுமான சர்வேசுவரனைக் கண்டு, திருவடிகளைக் கைகளால் தொழுது, அடியேனுடைய தன்மையைச் சொல்லியருளாய் என்கிறாள்.   வி-கு :- நாராய்! பெருமானைக் கண்டு தொழுது அடியேன் திறம் பணியீர் என்க. பெடை – பெண்நாரை. கரு – என்றது, புணர்ச்சியால் உண்டாகும் அழகினை.


                                      நாதன் பாம்பணையப்பனிடம்…..


                                                   பல்லவி

                                நாதன் பாம்பணையப்பனிடம் சொல்வாயென்

                                சோதனை வாழ்வை கைகூப்பித் தாள்பணிந்து

                                                  அனுபல்லவி

                                ஓதக்கடல் நடுவே உறங்குமுலகுண்டவாயன்                    

                                மாதவன் கேசவன் மதுசூதனனந்த       

                                                     சரணம்                                                                           

                                காதலுக்குரிய தன் பேடையுடன் திரியும் 

                                சீதள நீறுலவும் அழகிய நாரையே                                

                                வேத வேள்களின் ஓசைகள் முழங்கிடும்

                                பூதலம் புகழும் திருவண் வண்டூறுறை

No comments:

Post a Comment