கருடன் மீதேறி….
பல்லவி
கருடன் மீதேறி பவனி வரும் திருமாலே
கருணை வைத்தெனையே காத்தருள்வாய் கேசவனே
அனுபல்லவி
திருமகளைத் திருமார்பில் வைத்திருக்கும் மாதவனே
அருமறைகள் போற்றும் அனந்தபத்மநாபனே
சரணம்
இருவினைப் பயனகல வேண்டியே உனது
திருவடி பணிந்தேன் திருவின் நாயகனே
இருள் நீங்கியென் மனம் ஒளியுறச்செய்திட
பெருமாளே உனையன்றி வேறுயாரென் துணை
No comments:
Post a Comment