அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே
உண்ணாமுலையே உமையாளே - நண்ணா
நினைதோறும் போற்று செய நின்னடியர் உண்ண
மனைதோறும் சோறுகொண்டு வா அண்ணாமலையாரின் அகத்துக்கினியாளே……
பல்லவி
அண்ணாமலையாரின் அகத்துக்கினியாளே
உண்ணாமுலையுமையே உன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
விண்ணாளுமிந்திரனும் அரனயனரியும்
அண்ணாந்து கைதொழும் கேசவன் சோதரியே
சரணம்
வெண்ணிலவின் பிறையணிந்த தாமரைக்கரத்தாளே
மண்மகளும் கலைமகளும் துணை நின்று பணி செய்யும்
பெண்ணணங்கே மலைமகளே மறைபோற்றும் மாதவமே
பண்ணிசைத்துப்புகழ் பாடியுன்னருள் வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment