Tuesday, 30 August 2022

பலப் பல பெயருடைய……..

        விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் !


#வினை_தீர்க்கும் 

#கணபதியின்_திருநாமங்கள்


ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்

ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்

கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்

கஜகர்ணன் - யானைக்காது உடையவன்

லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்

விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்

விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்

விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்

தூமகேது - தீப்போல் சுடர்பவன்

கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்

பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்

கஜானன் - யானைமுகத்தோன்

வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்

சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்

ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்

ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்


                                                     பலப் பல பெயருடைய……..


                                                                  பல்லவி

                                            பலப் பல பெயருடைய கரிமுகனைத் துதித்தேன்

                                            அலகிலா விளையாடல் பல புரிந்த கணபதியை

                                                                    துரிதம்

                                             விநாயகன் ஹேரம்பன் வேழமுகன் ஐங்கரன்

                                             கணாதிபன் வாரணமுகன்  பிள்ளையார் கணேசனென                                        

                                                               அனுபல்லவி

                                           குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு புகழென

                                            நலமனைத்தும் நல்கிடும் கேசவன் மருகனை

                                                                    சரணம்

                                            சுமுகன் ஏகதந்தன் கபிலவர்ணன் கஜகர்ணன்

                                            லம்போபதரன் விகடன் ஶ்ரீ விக்ன ராஜன்

                                            கஜானனன் பாலசந்திரன் தூமகேது

                                            வக்ரதுண்டன் சூர்ப்பகர்ணன் கணாத்யக்ஷனென

                                            

“ஐங்கரனின் ஐந்து ரத்தினங்கள்”

 

                     “ஐங்கரனின் ஐந்து ரத்தினங்கள்”

                              பல்லவி

              ஆனைமுகத்தோனை ஐங்கரனைத் துதிப்போம்

              தேனெனத் தித்திக்குமவன் புகழ் பாடி

                              அனுபல்லவி

              பானை வயிற்றோன் அவன் பாதம் பணிந்து

              ஞானம் நல்வழ்வு அனைத்தும் பெறுவோம்                                                                               

                                    சரணம்

              மகிழ்வுடன் மோதகம் கையிலேந்தும் கரிமுகனை

              இகபர சுகம் தரும் இந்தின் பிறையணியணிந்தோனை

              சகலரையும் காப்பவனை கஜமுனை அழித்தவனை
              புகலடைந்தோர்க்கு அடைக்கலமளிப்பவனை

              நரர் சுரர் வணங்கிடும் நவநிதி நாயகனை
              சிரம் பணியாதவர்க்கு பயமளித்திடுபவனை
              அரக்கன் கஜமுகனும் கணங்களும் பணிந்திடும்
              பரம்பொருளானவனை ஒளிமிகு பாஸ்கரனை
    
              சிரம் கொய்தரக்கன் கஜமுகனை வதைத்தவனை
              பருத்த தொந்தியும் கரிமுகமும் கொண்டவனை
              கருணை பொறுமையுடன் மகிழ்ச்சி தருபவனை
              அருளளித்து பணிபவர்க்கு நலமளிப்பவனை
   
              அரக்கரின் கர்வம் தீர்த்தவனை அரன் மகனை
              சிரத்தில் மதம் பெருகும் வேழமுகத்தோனை
              வறியவர் குறைதீர்க்கும்  வாரணமுகனை
              உபநிடதங்கள் போற்றுகின்ற ஐங்கரனை

              பெரிய உருவம் கொண்ட ஆனைமுகனை
              அழகிய தந்தமுள்ள ஏகதந்தனை
              தடைகளை உடைப்பவனை முடிவில்லாதவனை
              யோகியர் மனத்துறையும் காலகாலன் மகனை
   
             கணபதியைப் போற்றுமிவ் வைரவரிகளை
             தினம் காலை மாலை துதித்துடுமனைவருக்கும்
             நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்
             கல்வியும் நன்மையுமனைத்தும் கிடைத்திடும்

गणेशपञ्चरत्नम् स्तोत्रं
मुदाकरात्तमोदकं सदा विमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरक्षकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥१॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥२॥

समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥

अकिंचनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनंजयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥४॥

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥

महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥६॥

மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதி கொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர்.

வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும் நாயகன், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன்மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாறோ, அவர் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

   

          

        

 




             
             

         

Monday, 29 August 2022

கோபுரதரிசனம்

 


                                             கோபுரதரிசனம்….


                                                  பல்லவி

                                  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்

                                  கோபாலன் கேசவன் குடியிருக்கும் கோயில்

                                                அனுபல்லவி                                   

                                  சோபனம் தரும் நுழைவாயில் அழகுடன்

                                  தீப ஒளி தரும் மாடங்களமைந்த

                                                   சரணம்

                                 ஆபத்திருளறச்செய்திடுமதுவே

                                 தாபத்ரயங்களை போக்கிடுமதுவே

                                 கோபங்கள் விலக்கி குணம் பெறச்செய்திடும்

                                  சாபங்கள் நீங்கிடும் வழிபடுவோர்க்கு                                         

முருகாவென்றொரு முறை….

 அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன் .


                                    முருகாவென்றொரு முறை….


                                                 பல்லவி

                                 முருகாவென்றொரு முறை சொன்னால் போதும்

                                 அருகினில் வருவான் அருள் மழை பொழிவான்

                                                அனுபல்லவி

                                 திருமால் கேசவன் மருகன் குமரன்

                                 கருவிலுருவாகாத கார்த்திகேயன்

                                                      சரணம்

                                 பெருமான் சிவனின் அஞ்சுமுகம் நினைப்போர்க்கு

                                  குருவான ஆறுமுகன் காத்தருள வருவான்

                                  ஒருகால் நினைப்போர்க்கு இருகால் தெரியும்

                                  நெஞ்சாரத்துதிப்பவர்க்கு அஞ்சேலென வேல் தோன்றும்

#உலகினிலே #பல….

 #உலகினிலே #பல….


                    பல்லவி


உலகினிலே பல நிறம் கண்டேன்

திருமால்  வடிவம் அதில் நான் கண்டேன்


                  அனுபல்லவி


உலகினிலே பல மணம் கண்டேன்

அதில் கேசவன் கருணை மனம் கண்டேன் 


                    சரணம்


பச்சை நிறம் அவன் திருமேனி

பவள நிறம் அவன் செவ்விதழே

மஞ்சள் முகம் அவன் தேவி முகம்

வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்


சேயென யசோதை மனம் மகிழ

ஆயர் குலத்திலவன் பிறந்து

தூய மனமுடைய கோபியரை

நேயமுடன் கவர்ந்தான் மாயக்கண்ணன்


உலகினிலே பல நிறம் கண்டேன்

அதில் மாதவன் மதிமுகம் நான் கண்டேன்

பலப்பல அவதாரம் எடுத்தெடுத்து

நலம் தரும் நாரணன் வடிவினிலே

Sunday, 28 August 2022

ஆனைமுகத்தோனின்……..

 

      கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


                                                        ஆனைமுகத்தோனின்……..


                                                                     பல்லவி                                                                            

                                                  ஆனைமுகத்தோனின் அரவிந்த பதம் பணிந்தேன்

                                                  வானுறை தேவரும் கணங்களும் வணங்கிடும்

                                                                அனுபல்லவி

                                                  ஆனிரை மேய்க்கும் கேசவன் மருகன்

                                                  தேன் மொழியாள் உமையின் அருமைப் புதல்வன்

                                                                   சரணம்

                                                   விளாம்பழமும் நாவல் பழமும்

                                                   விரும்பி சுவைத்திடும் விக்ன விநாயகன்    

                                                   வினையிடர் துன்பம் களைந்திடும் கரிமுகன்                                               

                                                   அனைத்து நலன்களும் அருளும் சுமுகன்

திருத்தனநகர் வளர்……


நீறு தாங்கிய திருநுத லானை
    நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
    குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
    கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

மனமே, நீ, திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும், அந்நெற்றியில் ஒரு கண்ணை உடைய வனும், வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும், குற்றம் சிறிதும் இல்லாத வனும், கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய, வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற, சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக. 

                                                   திருத்தினைநகர் வளர்……

                                                         பல்லவி

                                         திருத்தினைநகர் வளர் சிவக்கொழுந்தீசனை     

                                         கருத்திலிருத்தி வணங்கித் துதித்திடுவோம்

                                                       அனுபல்லவி

                                         கருநிற வண்ணன் கேசவன் நேசனை 

                                         கருணாகரனை வருமிடர் களைபவனை     

                                                          சரணம்                                                                                                                          

                                         திருநீறணிந்த நெற்றிக்கண்ணனை

                                         ஒருகண் அந்த நெற்றியிலுடையவனை

                                         வரிசையாய் வளையணிந்த அன்னை உமையை

                                         ஒருபாகம் தனிலே வைத்திருப்பவனை


                                         விரிசடைதனிலே நீரைச் சுமந்திருப்பவனை

                                         அரிய ஒளியாகி அமரர் குலம் காப்பவனை

                                         திரிபுரமெரித்தவனை பிறைநிலவணிந்தவனை

                                         தருமம் தழைத்திடும் பெருமைக்குரிய

                                          

                                                          


கண்ணன் திருக்கோலம்….

 

      #க்ருஷ்ணரூபாணி_அஸங்க்யாநி......#கண்ணனின்_திருக்கோலங்கள்_எண்ணற்றவை


      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஈடுபாடு. 


      நம்மாழ்வாருக்கு உரலோடு கட்டுண்டு ஏங்கியிருந்த கோலத்தில் மயக்கம்.


      குலசேகராழ்வாருக்கு அழுகையும் அஞ்சு நோக்கும் கூடிய கோலத்தில் இன்பம்.


      ஸ்வாமி தேசிகனுக்கு வேணுகோபால திருக்கோலத்தில் ஆசை. 


      பீஷ்மருக்கோ இதையெல்லாம் விட வேறொரு திவ்ய ஸேவை.‌யுத்தத்தில் பார்த்தஸாரதியாய் எதிரே நின்ற ஸேவையில் ஈடுபாடு.


                                                        கண்ணன் திருக்கோலம்….    


                                                                   பல்லவி

                                                   கண்ணனின் திருக்கோலம் காணவே பேரின்பம்

                                                   மண்ணையுண்டவாயன்  கேசவன் மாதவன்

                                                                  அனுபல்லவி

                                                   மண்ணாசை விட்டொழித்த கங்கை மைந்தனுக்கு

                                                   கண்ணனை சாரதியாய் காணவே விருப்பம்

                                                                         சரணம்

                                                   கண்ணன் சிறுபிள்ளையாய் வெண்ணையுண்ட வாயனாய்

                                                   கண்டிடவே குலசேகரப் பெருமாளின் விருப்பம்       

                                                   புண்ணியம் செய்த  குருகூர் நம்பிக்கோ         

                                                   உரலில் கட்டுண்டவனைக் காண மிக ஆசை


                                                   வேணுகோபாலனெனுமழகிய கோலத்தில்

                                                   காணவே வேதாந்த தேசிகரின் விருப்பம்

                                                   ஆணழகன் கண்ணணுக்கோ பல பல ரூபங்கள்

                                                   மாணப் பெரியதவன் வடிவங்களனைத்தும்

                                                                                                                                                                                              

                                                                                                                                                      

    

விதம் விதமாகவே……

 

                                          விதம் விதமாகவே……


                                                   பல்லவி

                                 விதம் விதமாகவே நிதம் காட்சியளித்திடுமுன்

                                 பதம் தனைப் பணிந்தேன் காமாக்ஷி எனக்கருள்வாய்

                                                  அனுபல்லவி

                                 கதம்ப வனந்தனில் வாசம் புரிபவளே

                                 சிதம்பரநாதன் சிவன் மனங்கவர்ந்தவளே

                                                        சரணம்

                                  சதமல்ல இவ்வுலக வாழ்வென்றறிந்தே

                                  முதம் பெற வேண்டித் துதித்தேன் உனையே

                                  இதமுடன் எனையே பரிந்தெடுத்தணைத்து

                                   உதவிட வேண்டினேன் கேசவன் சோதரி



Saturday, 27 August 2022

அரவணைத்தெனையே…..

 #ஜாதாபராதாமபி_மாம்_அநுகம்ப்ய_கோதே

#கோப்த்ரீ_யதி_த்வமஸி_யுக்தமிதம்_பவித்யா:

#வாத்ஸல்ய_நிர்பரதயா_ஜநநீ_குமாரம்

#ஸ்தந்யேந_வர்த்தயதி_தஷ்ட_பயோதராऽபி

                     கோதாஸ்துதி 27

      உன்னால் அனைத்தும் பெருமை பெறுகின்றன. எமக்கெல்லாம் நீ யாராக இருக்கின்றாய்? ஜகந்மாதாவாக இருக்கின்றாய்.  எங்கள் குற்றங்களையெல்லாம், உன் அநுக்ரஹம் அல்லவோ வெள்ளம்போல் அடித்துச் செல்கிறது! உலகிலே தாய் தன் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, அவளது கொங்கையைக் குழந்தை கடித்துவிட்டால் பால் கொடுப்பதை நிறுத்திவிடுவாளா? அன்பின் மிகுதியால், அதைப் பொருட்படுத்தாது பாலூட்டுகிறாளல்லவா!  அதுபோலவே தாயான நீயும் எங்களை, எவ்வளவு அபராதங்கள் செய்தாலும், உன் அருளின் மிகுதியால் காக்கின்றாய்! 

MEANING:

O GodhA piratti! It is fitting indeed that You protect me out of Your limitless mercy, even if I have committed many aparAdhams (acts not sanctioned by SaasthrAs). Is it not true that a Mother nourishes her baby out of the great affection for it, even if that baby bites the breast of the very mother feeding it? The mother does not get angry at the child that she loves and does not stop feeding it. Thus, it is appropriate that You protect me, the undeserving one

27.Oh Godhaa, though I have commited many crimes  , you have been merciful to me,

As you are   my protector,  and I think  it is proper  for  a mother ,

Who is filled with affection   to protect  the   boy   who ,
Bites her   breast   and  continue to give   milk to  him.

                       जातापराधमपि मामनुकम्प्य गोदे गोप्त्री यदि त्वमसि युक्तमिदं भवत्या।

     वात्सल्यनिर्भरतया जननी कुमारं स्तन्येन वर्धयति दष्टपयोधराऽपि॥२७॥


                     அரவணைத்தெனையே…..


                                      பல்லவி

                      அரவணைத்தெனையே ஆண்டருள்வாயே

                      பரந்தான் கேசவன் மனங்கவர்ந்த என் தாயே

                                      அனுபல்லவி

                      அரங்கன் அணியும் முன்னே மாலைதனைத்தானே

                      பரவசமாய்ச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே

                                           சரணம்                                                                                                    

                      பால் பருகும் குழந்தை தன் தாய் மடியைக் கடித்தால்

                      தண்டிக்கும் தாயார் ஏதுண்டு இவ்வுலகில்

                      எடுத்தணைத்து மீண்டும் பாலூட்டவே செய்வாள்

                     அதுபோல அன்னையே கோதாப்பிராட்டியே

உமாபதிக்கு வேறு…..


                                        உமாபதிக்கு வேறு…..


                                               பல்லவி

                                    உமாபதிக்கு வேறு தெய்வம் 

                                   சமானமாகுமா கயிலை

                                              அனுபல்லவி

                                   குமாரனயீன்ற நமச்சிவாயன்

                                   கேசவன் நேசன்

                                                 சரணம்

                                   ஒரு தரமவன் நாமமுரைத்தாலும் போதும்

                                   பவ பயம் போக்கி பரகதி தருவான்

                                   இனி பல ஜென்மங்களெடுக்காமல் செய்யும்

                                   அவன் புகழ் பாடி நற்கதி பெறுவோம்

மலையத்வஜன் மகளே…….

 

मीनाक्षीस्तोत्रम्

॥ श्रीः ॥ श्रीविद्ये शिववामभागनिलये श्रीराजराजार्चिते श्रीनाथादिगुरुस्वरूपविभवे चिन्तामणीपीठिके । श्रीवाणीगिरिजानुताङ्घ्रिकमले श्रीशांभवि श्रीशिवे मध्याह्ने मलयध्वजाधिपसुते मां पाहि मीनाम्बिके ॥ १ ॥ चक्रस्थेऽचपले चराचरजगन्नाथे जगत्पूजिते आर्तालीवरदे नताभयकरे वक्षोजभारान्विते । विद्ये वेदकलापमौलिविदिते विद्युल्लताविग्रहे मातः पूर्णसुधारसार्द्रहृदये मां पाहि मीनाम्बिके ॥ २ ॥ कोटीराङ्गदरत्नकुण्डलधरे कोदण्डबाणाञ्चिते कोकाकारकुचद्वयोपरिलसत्प्रालम्बहाराञ्चिते । शिञ्जन्नूपुरपादसारसमणीश्रीपादुकालंकृते मद्दारिद्र्यभुजंगगारुडखगे मां पाहि मीनाम्बिके ॥ ३॥ ब्रह्मेशाच्युतगीयमानचरिते प्रेतासनान्तस्थिते पाशोदङ्कुशचापबाणकलिते बालेन्दुचूडाञ्चिते । बाले बालकुरङ्गलोलनयने बालार्ककोट्युज्ज्वले मुद्राराधितदैवते मुनिसुते मां पाहि मीनाम्बिके ॥ ४ ॥ गन्धर्वामरयक्षपन्नगनुते गङ्गाधरालिङ्गिते गायत्रीगरुडासने कमलजे सुश्यामले सुस्थिते । खातीते खलदारुपावकशिखे खद्योतकोट्युज्ज्वले मन्त्राराधितदैवते मुनिसुते मां पाही मीनाम्बिके ॥ ५ ॥ नादे नारदतुम्बुराद्यविनुते नादान्तनादात्मिके नित्ये नीललतात्मिके निरुपमे नीवारशूकोपमे । कान्ते कामकले कदम्बनिलये कामेश्वराङ्कस्थिते मद्विद्ये मदभीष्टकल्पलतिके मां पाहि मीनाम्बिके ॥ ६ ॥ वीणानादनिमीलितार्धनयने विस्रस्तचूलीभरे ताम्बूलारुणपल्लवाधरयुते ताटङ्कहारान्विते । श्यामे चन्द्रकलावतंसकलिते कस्तूरिकाफालिके पूर्णे पूर्णकलाभिरामवदने मां पाहि मीनाम्बिके ॥ ७॥ शब्दब्रह्ममयी चराचरमयी ज्योतिर्मयी वाङ्मयी नित्यानन्दमयी निरञ्जनमयी तत्त्वंमयी चिन्मयी । तत्त्वातीतमयी परात्परमयी मायामयी श्रीमयी सर्वैश्वर्यमयी सदाशिवमयी मां पाहि मीनाम्बिके ॥ ८ ॥ इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छंकरभगवतः कृतौ मीनाक्षीस्तोत्रं संपूर्णम् ॥


                                                          மலையத்வஜன் மகளே…….

                                                                      பல்லவி

                                                 மலையத்வஜன் மகேளே மீனாம்பிகையே
                                                 தலை வணங்கிப் பணிந்தேன் எனக்கருள்வாயே

                                                                     அனுபல்லவி

                                                 அலைமகள் நாதன் கேசவன் சோதரியே
                                                 மலைமகள் கலைமகள் பணிந்திடும் தேவியே
                                                 
                                                                        சரணம்

                                                 சிவனிடம் கொண்டவளே ஶ்ரீவித்யா தேவி
                                                 புவனமாள்வோர் போற்றும் புவியரசி நீயே
                                                 மூவரும் நீயே  மூவருக்கும் முதலே 
                                                 சிந்தாமணி வீட்டிலுள்ள சூரியச் சுடரே
                  
                                                  சராச்சரங்களை ஆண்டருள்பவளே
                                                  திருச்சக்கரம்தனில் வீற்றிருப்பவளே
                                                  முலை பருத்ததால் வளையும் மின்னல் வடிவே
                                                  மறை புகழ் மாயே அடியார்க்கருள்பவளே
                                                
                                                 வைரகுண்டலங்கள் மகுடமணிந்தவளே
                                                 கைகளில் வில்லம்பும் காலணியும் கொலுசும்
                                                 மார்பில் மின்னும் மணிமாலைகளும் தரித்து
                                                 வறுமை பாம்பை விரட்டும் கழுகானவளே  
      
                                                  பஞ்சப்ரேதாசனத்தில் வீற்றிருப்பவளே
                                                  பாசாங்குசமும் வில்லம்பும் தரித்தவளே
                                                  நிலவின் பிறையணிந்தவளே பாலே சுசீலே
                                                  கரமுத்திரை  வணங்கும் முனிவர் மகளே
                                                    
                                                    கங்காதரன் தழுவும் காயத்ரி தேவியே  
                                                    விண்ணோர் கந்தர்வரனைவரும் வணங்கிடும்
                                                    கமலாசனத்தில் வீற்றிருப்பவளே
                                                    கருநிறத்தவளே நிலைத்திருப்பவளே
                                                  
                                                   கோடி சூரியனை மிஞ்சுமொளியுடயவளே
                                                   தீயவரெனும் தருவையழித்திடும் நெருப்பே
                                                   மந்திர ஒலிகளால் துதிக்கப் படுபவளே
                                                   யாவரும் பணிந்திடும் முனிவர் மகளே

                                               நாரதர் தும்புரு வணங்கிடும் தேவியே
                                               நாத சங்கீதத்தின் முதலே மூலமே
                                               நீலக்கொடியே நிலைத்திருப்பவளே
                                               கோலக் கிளியேந்தும் ஒப்பற்றவளே
                                                
                                               பாசமும் நேசமும் நிறைந்த பத்தினியே
                                               கடம்ப வனத்துறை கற்பகக்கொடியே
                                               காமேச்வரனிடம் கொண்ட காமேச்வரியே
                                               ஞானமனைத்தும் அறிவுமானவளே
   
                                               வீணையின் நாதத்தில் மயங்கி இருப்பவளே
                                               தாம்பூலத்தால் சிவந்த இதழுடையவளே
                                               தாடங்கமாபரணம் நெற்றித்திலகமுடன்
                                               பிறைநிலவணிந்தளே மதி முகத்தாளே
                                            
                                                 சராசரங்களும் சப்தப்ரம்மமும்
                                                 ஒளியுமோசையும் ஆன பரம்பொருளே
                                                 அருளே சிவமே மாயையுமானவளே
                                                 திருவும் பொருளுமாயனைத்துமானவளே
                                                                                        
                                               
                                                  
                                                
                                                   

தேனாயினிக்கும்…..

 


                                            தேனாயினிக்கும்…..


                                                 பல்லவி

                               தேனாயினிக்கும் திருநாமமுடையவளே

                               மீனாம்பிகையே எனக்கருள் புரிவாய்

                                              அனுபல்லவி

                               வானாளுமிந்திரனும் நரர்சுரரும் நான்முகனும்

                               கானுறை முனிவர்களும் வணங்கித் துதித்திடும்

                                                  சரணம்

                              மீனையொத்த விழிபடைத்த கொடியிடையாளே

                              ஆனிறைகள் மேய்க்கும் கேசவன் சோதரியே

                              கூனல் பிறையணிந்த சொக்கநாதன் நாயகியே

                              நான் மாடக் கூடலை ஆட்சி செய்பவளே

Friday, 26 August 2022

தொலைவில் நீ…..


एषा तवाक्षिसुषमा विषमायुधस्य
नाराचवर्षलहरी नगराजकन्ये ।
शङ्के करोति शतधा हृदि धैर्यमुद्रां
श्रीकामकोटि यदसौ शिशिरांशुमौलेः ॥93॥

ஏஷா தவாக்ஷிஸுஷமா விஷமாயுதஸ்ய

நாராசவர்ஷ லஹரீ நகராஜகன்யே |

ஶம்கே கரோதி ஶததா ஹ்ருதி தைர்யமுத்ராம்

ஸ்ரீகாமகோடி யதஸௌ ஶிஶிராம்ஶு மௌலே: ||93||


                                                              தொலைவில் நீ…..


                                                                  பல்லவி

                                             தொலைவில் நீ இருந்தாலும் தாயே காமாக்ஷி

                                             சிலைவடிவில் எழுத்தருளி அடியார்க்கருள்பவளே

                                                               அனுபல்லவி

                                             கலைமகள் நாதன் பிரமனைப் படைத்த

                                             அலைமகள் நாயகன்  கேசவன் சோதரி          

                                                                    சரணம்                                                                        

                                             மலைமகளே காமகோடி காமாக்ஷியுந்தன்

                                            களையான கடைக்கண் மன்மத பாணங்கள்

                                            நிலையாக வீற்றிருக்கும் சந்திரசேகரன் மனதை

                                            நிலைகுலையச்செய்து அலைபாய வைக்கிறது

தயாநாயகித் தாயாரை……



                                           தயாநாயகித் தாயாரை……


                                                   பல்லவி

                                தயாநாயகித் தாயரைப் பணிந்தேன்

                                அருமாகடலமுதன் கேசவன் மார்பிலுறை

                                              அனுபல்லவி       

                                தயாநிதியைத் திருமாமகளை

                                அயர்வின்றி அடியார்க்கு அருளினை அளித்திடும்

                                               சரணம்

                                வரம் தரும் கரமுமபயகரமும் நீட்டும்

                                பரதேவதையை  பாற்கடலிலுதித்தவளை

                                நரர்சுரர் நாரதர் நான்முகனிந்திரன்

                                கரம் பணிந்தேத்தும் மகாலக்ஷ்மியை

Thursday, 25 August 2022

கண்ணனும்…..

  படித்தேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!

கண்ணனும்…..

பல்லவி

கண்ணனும் ராமனும் ஶ்ரீமன் நாராயணனும்

திண்ணமாயுதித்தது திருவோணத்திருநாளே

அனுபல்லவி

மண்ணில் பல திவ்ய தேசங்களிலர்ச்சையாய்

புண்ணியம் தரவென எழுந்தருளிய கேசவனும்

சரணம்

விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் வகையில்

வண்ணங்கள் பல காட்டி வாழும் நெறி காட்டி

புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தனைக் காட்டும்

கண்ணியனைப் போற்றி பண்ணிசைத்துப் பாடுவோம்




சந்ததமுனையே…….

 காமாக்ஷி ஸத்குவலயஸ்ய ஸகோத்ரபாவா-

தாக்ராமதி ஶ்ருதிமஸௌ தவ த்ருஷ்டிபாத: |

கிம் ச ஸ்புடம் குடிலதாம் ப்ரகடீ கரோதி

ப்ரூவல்லரீ பரிசிதஸ்ய பலம் கிமேதத் ||92||


कामाक्षि सत्कुवलयस्य सगोत्रभावा- 
दाक्रामति श्रुतिमसौ तव दृष्टिपातः ।
किञ्च स्फुटं कुटिलतां प्रकटीकरोति
भ्रूवल्लरीपरिचितस्य फलं किमेतत् ॥92॥

காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வையானது நல்ல கருநெய்தல் மலரின் நட்பாலே சுருதியாம் வேதவழியை அடைகிறது. ஆயினும், புருவக்கொடியின் பரிச்சயத்தால் குடிலமாயுமிருக்கிறது.


                                                          சந்ததமுனையே…….

                                                                    பல்லவி  

                                                சந்ததமுனையே  பணிந்தேன் காமாக்ஷி

                                                எந்தனையாண்டருள வேண்டுமெனத் துதித்து    

                                                                  அனுபல்லவி

                                                நந்தகோபன் குமரன் கேசவன் சோதரி  

                                                சந்திரசேகரன்   ஏகம்பன் நாயகி

                                                                     சரணம்                                                    

                                                உந்தன் கடைவிழியாம் கருங்குவளை மலர்கள்

                                                சொந்தம் கொண்டாடி மறை வழி சென்றாலும்

                                                விந்தையாய் வளைந்தவுன்  புருவக்கொடியின்

                                                பந்தத்தாலதுவும் நெளிந்து வளைந்தது