Tuesday, 31 October 2023

உள் முகமாயென்னுள்….

 ஸ்ரீ மாத்ரே நம: தேவி எப்போழுதும் நம் உள்ளத்தில் வீற்றிருக்கிறாள் அந்தர்முகமாக ! அதை உணர்ந்தால் எந்தக் கவலையும் இல்லை ! ஸதா அவள் த்யானத்தில் இருக்க ப் பயில்வோமாக!

அந்தர்முக ஸமாராத்யா பஹிர் முக ஸுதுர்லபா |

அந்தர்முக = உள்முகமாக
சமாராதன் = திருப்திபடுத்துதல்


#870 அந்தர்முக சமாராத்யா; = உள்முகமாக தியானிக்கும் ஆத்மஞானிகளால் திருப்திபடுத்தபடுபவள் - ஆராதிக்கப்படுபவள் 


()
பஹிர்முக = வெளிமுகமாக - புறசெயல்பாடு சிந்தனைகள்
துர்லபா = அடைவதற்கு கடினமான


#871 பஹிர்முக சுதுர்லபா; = உலகாய சிந்தனை-செயற்பாடுகளை உடையவர்களுக்கு கடினமான இலக்காகுபவள் 

   
                                 உள் முகமாயென்னுள்….


                                           பல்லவி

                             உள் முகமாயென்னுள் வீற்றிருப்பவளே
                             தெள்ளமுதே காமாக்ஷி உன் பதம் பணிந்தேன்

                                          அனுபல்லவி

                             கள்வன் கேசவன் அன்பு சோதரி
                             வெளிப்புறச் செயல்களாலடைய முடியாதவளே

                                             சரணம்
                            
                             புள்ளிருக்கு வேளூர் தையல்நாயகியே
                             வெள்ளியங்கிரி வளர் சௌந்திர நாயகியே
                             வெள்ளமெனக் கருணைமழை பொழியும் காமேச்வரியே
                             உள்ளத்துள் வைத்துனை அனுதினம் துதித்தேன்

अन्तर्मुख-समाराध्या बहिर्मुख-सुदुर्लभा
                             

தன்னையே மகனாக…..

 

படித்தேன்,ரசித்தேன்,பாடல் புனைந்தேன்!


தன்னையே மகனாக…..


பல்லவி


தன்னையே மகனாக பாவிக்கும் படி வேண்டிய

மன்னனை ஶ்ரீ ரகுராமனை வணங்கினேன்


அனுபல்லவி


புன்னகை முகமுடையவனைப் பன்னக சயனனை

சென்ன கேசவனை தசரத குமாரனை


சரணம்


சொன்ன சொல் காப்பவனை இன்னருள் தருபவனை

ஒருசொல்,ஒரு இல், ஒரு வில்லென வாழ்பவனை

தன்னிகரில்லாத புருஷோத்தமனை,

சென்றிலங்கையரக்கன் ராவணனை வென்றவனை


“ராமரின்_விரதத்தை_சோதித்த_பெண்!“


    சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை.


 அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது.


  ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்தி இருந்தாள். 


அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார். 


அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது.


கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது. 


அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்தபெண்ணே! 


இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் அழகும், கண் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை. 


எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்துதான் நான் இங்கு வந்தேன். 


உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர். 


இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர். 


ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே. 


அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள். 


அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்.. 


!! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!!

Text courtesy: மாலதி ஜயராமன்


Dear admins,

நான் பலமுறை விளக்கிவிட்டேன். என்னுடைய பதிவின் தலைப்பைப் பாருங்கள். “ படித்தேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!” ஆகப் பாடல் தோன்றக் காரணமே( உந்துதலே திருமதி. மாலதி ஜயராமனின் போஸ்ட்) ஆக இரண்டையும் சேர்த்துப் படித்தாலே, பாடலின் பொருளும் நோக்கமும் படிப்பவர்களைப் போய்ச்சேரும். “The readers of the song will get the full impact” - அது ஒருவரானாலும் சரி,பலரானாலும் சரி! மேலும் , I have already set a precedence for these shared post and my songs. ஆக இந்த விளக்கத்தை புரிந்து கொண்டு நீங்கள் என் பதிவை அப்ரூவ் செய்தாலும் சரி, இல்லை புறந்தள்ளி ஒதுக்கினாலும் சரி. I leave it to the good sense of the all powerful admins! “ என்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை கோவிந்தா🙏”


உங்க suggestion/ rejection, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல கதையா இருக்கு! நான் தான் என் பாடலுக்கு காரணம் , மாலதி ஜயராமன் போஸ்ட் என்பதை விளக்கும் வண்ணமாக “ text courtesy: மாலதி ஜயராமன் என்று தெளிவாக க்குறிப்பிட்டிருக்கிறேனே. பின் ஏன் அவருடைய லிங்க் தரவேண்டுமென அட்மின் விரும்புகிறீர்கள். எனக்குப் புரியவில்லை!🙏


 “ பிடித்த முயலுக்கு மூன்றே காலென்ற “ உங்கள் வாதத்திற்கு( பிடிவாதத்திற்கு) முன் நான் தோற்றேன்”

Narayana,Narayana,Narayana 🙏🙏🙏

Monday, 30 October 2023

செந்தில் தலம் வளர்…….

  


                                     செந்தில் தலம் வளர்…….


                                                பல்லவி

                            செந்தில் தலம் வளர் கண்டிக் கதிர்வேலா

                           கந்தனே உந்தன் மேல் அன்பு கொண்டேன்

                                            அனுபல்லவி

                           உந்திகமலன் கேசவன் மருகனே

                           நந்தி வாகனன் சிவபெருமான் மகனே

                                             சரணம்

                           பந்த பாசத்தளைகளில் சிக்குண்டு

                           சந்ததமும் சஞ்சலத்திலுழலாமல்        

                           உந்தன் திருவடியை தினம் பணிந்து

                           வந்தனை புரிந்திடச் செய்வாயே                    


பறந்து வருவார்…..

 


                                          பறந்து வருவார்…..



                                                  பல்லவி

                               பறந்து வருவார் பரந்தாமன் கேசவன்

                               பக்தியோடழைத்தால் போதுமுடனே

                                                அனுபல்லவி

                               சிறந்த கதையான யானையின் மோட்சமே

                               அறிந்த ஒன்றல்லவோ நம்மனைவருக்கும்

                                                    சரணம்

                               இறக்கும் தருவாயில் அஜாமிளன் தனை

                               மறந்தவன் நாமம் சொன்ன கதையும் நாமறிவோம்

                               அறம் தழைத்திடவே அகிலம்தனில் பல

                               பிறப்பெடுத்த அந்த ஶ்ரீமன் நாராயணன்

     

                                

     

நாலையுமறிந்த நாராயணனே…..

 

                                       நாலையுமறிந்த நாராயணனே…..


                                               பல்லவி

                                நாலையுமறிந்த நாராயணனே உன்றன்

                               காலைப்பிடித்தேன் எனக்கருள்வாயென

                                              அனுபல்லவி

                               சேலையளித்துக் காரிகையைக் காத்தவனே

                                வாலியை வதம் செய்த ஶ்ரீரகுராமனே                                                           

                                                      சரணம்

                                பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னம் போல்

                                நல்லவரைத் தீயவரைப் பிரித்தறியுமறிவு தருவாயே

                                ஆலிலையில் துயின்ற கேசவனே மாதவனே

                                சோலை வளர்த் திருமாலே கள்ளழகன் நீயே

எல்லாமே நாராயணன்……

 


                                   எல்லாமே நாராயணன்……


                                                பல்லவி

                           எல்லாமே நாராயணனென்றறிந்த பின்னாலே

                           தொல்லை துயர் கவலை எனக்கெதற்கின்னும்

                                              அனுபல்லவி

                           நல்லருள் தருபவளைத் திருமகளைத் தன் மார்பில்

                           நல்லபடி வைத்திருக்கும் கேசவன் மாதவனும்

                                               சரணம்

                           வல்லரக்கர் குலமழித்த வாசுதேவனும்

                           பொல்லா காளிங்கன் தலைமீது நடம் புரிந்த

                           கள்ளழகன் ஶ்ரீகிருஷ்ணன் மதுசூதனனும்

                           மல்லரை மாட்டிய  தேவாதி தேவனும்        

திருமாலுன் திருமார்பில்…..

 


                           திருமாலுன் திருமார்பில்…..


                                    பல்லவி

                 திருமாலுன் திருமார்பில் பெரிய பிராட்டியெனும்

                 திரு வீற்றிருப்பதனால் தானுனக்குப் பெருமை

                                  அனுபல்லவி

                 திருவின் நாயகனே கேசவனே மாதவனே

                 திருவரங்கப் பெருமாளே எளியோர்க்கருள்பவனே

                                    சரணம்

                 இருவினையகலச் செய்யும் திருவேங்கடமுடையோனே

                 தருமநெறி காக்கப் பல அவதாரமெடுத்தவனே

                 வருமிடர் நீக்கி வாஞ்சையுடனெனைக் காக்கும்

                 அருமாகடலமுதே ஶ்ரீமன் நாராயணனே

Sunday, 29 October 2023

புவனம் போற்றும்…..



                                             புவனம் போற்றும்…..


                                                      பல்லவி

                                  புவனம் போற்றும் கமாக்ஷி தேவியே

                                  உவகையுடனே உன் பதம் பணிந்தேன்

                                                       துரிதம்

                                 தவம் செயும் முனிவரும் சுகசனகாதியரும்

                                 அரனயனரியும் அலைமகள் கலைமகள்

                                 நரர் சுரர் நாரதரிந்திரன் மற்றும் அனைவரும் வணங்கி

                                 கரம் பணிந்தேத்தும் அகிலாண்டேச்வரி

                                                   அனுபல்லவி

                                  குவலயம் கொண்டாடும் கேசவன் சோதரியே

                                  சிவனிடம் கொண்டவளே சிவகாமேச்வரியே

                                                    சரணம்

                                 தவத்திலா தாமரை மலரிலா தாயே

                                 எதில் நீ மலர்ந்தாய் என்னிடமுரைப்பாய்

                                 பக்தியிலா பாரின் சக்தியிலா நீ

                                 எதில் விரிந்தாய் அன்னையே ஏகாம்ரேச்வரியே


                                 அன்பிலா ஆற்றலிலா எதிலுள்ளாய் தாயே

                                 இதயத்திலா இல்லை கோவில் சிலையிலா

                                 உதயத்திலா அல்லது பெண்மையிலா நீ

                                 எதில் நிலைத்தாய் தேவி உலகநாயகியே


                                 உபசாரத்திலா செய்யும் பூசையலா

                                 சுப பலன் தருபவளே நீயுறைத்திடுவாய்

                                 ஆத்ம சமர்ப்பணத்தாலா தூயமனத்தாலா

                                 எதில் நிறைவடைவாய் தயே ஈச்வரியே         


எதில் மலர்ந்தாய்  என்  தாயே 

தவத்திலா;  தாமரையிலா 

எதில் வளர்ந்தாய்  என் தாயே 

பாரினிலா;  பக்தியிலா !

எதில்  விரிந்தாய்  என்  தாயே 

அன்பினிலா ; ஆற்றலிலா 

எதில் அமர்ந்தாய் என் தாயே 

ஹ்ருதயத்திலா அண்டத்திலா !

எதில்  உறைந்தாய்  என்  தாயே 

கோவிலிலா ; பெண்மையிலா 

எதில்  நிலைத்தாய்  என்  தாயே 

அணுவினிலா;  அகத்திலா ! 

எதில் மகிழ்ந்தாய் என் தாயே 

பூஜையிலா ; உபசாரத்திலா 

எதில் த்ருப்தியானாய்  என் தாயே 

தூய மனதினிலா; ஆத்ம சமர்பணத்திலா !

மன்னன் ரகுராமன்……



புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், மறைந்த நானி பால்கிவாலா, வேத சமுதாயத்தைப் பொறுத்தவரை, "குடிமக்கள் சமூகத்தில் தரவரிசைப்படுத்தப்படுவது செல்வம் அல்லது அதிகாரத்தால் அல்ல, மாறாக அவர்கள் கொண்டிருந்த நல்லொழுக்கம் மற்றும் பண்புகளால்" என்று கூறினார். இதை விளக்க ராமாயணத்தில் ஒரு சம்பவத்தை சொல்கிறேன். 

ஸ்ரீராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் வனவாசத்தில் தங்கள் நாட்களைக் கழித்தனர். சீதை ராவணனால் கடத்தப்பட்டாள். ராவணன் லங்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சீதை தனது நகைகளில் சிலவற்றை ரிஷ்யமுக மலையின் மீது எறிந்தாள். சுக்ரீவன் அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து தன்னுடன் வைத்திருந்தான். சீதையைத் தேடி ராம, லக்ஷ்மணன் இருவரும் மலைக்கு வந்தனர். சுக்ரீவன், அவர்கள் விசாரித்ததில், சீதையின் நகைகளைக் கொண்டு வந்து, தான் கண்டதைக் கூறினான். ஸ்ரீராமர் அந்த நகைகளை லக்ஷ்மணனுக்கு அடையாளம் காட்ட முடியுமா என்று பரிசீலித்தார். லக்ஷ்மணன் சீதாவின் காதணிகள் மற்றும் ஒரு கழுத்தணியை அடையாளம் காணத் தவறிவிட்டான், ஆனால் அவள் கணுக்காலைக் கண்டதும், "இது அன்னை சீதாவின் கணுக்கால்" என்று மகிழ்ச்சியுடன் வெடித்தார்.

சீதாவின் காதணிகள் (குண்டலம்) மற்றும் வளையல் (கேயூர்) ஆகியவற்றை ஏன் அடையாளம் காணவில்லை என்று ராமர் அவரிடம் கேட்டார். பதிலுக்கு லக்ஷ்மணன், 

நாஹம் ஜானாமி கேயூரம், நாஹம் ஜானாமி குண்டலம்,

நூபுரம் ஏவ ஜாநாமி, நித்யம் பாதாபிவந்தநாத்.

"நான் அன்னை சீதாவின் காதணிகளையும் அவரது வளையலையும் பார்த்ததில்லை, ஆனால் அவளுடைய புனித பாதங்களின் தூசியை தினமும் தொடும் போது இந்த கணுக்கால்களை நான் கவனித்தேன்."


नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले //

नूपुरे त्वभिजानामि नित्यं पादाभिवन्दनात् //

நாஹம் ஜானாமி கேயூரம்

நாஹம் ஜானாமி குண்டலம்

நூபுரே த்வபி ஜானாமி,

நித்யம் பாதாபி வந்தனாத்

“அண்ணா, எனக்கு மன்னியின் கால் மெட்டி மட்டுமே தெரியும். ஏனென்றால் மன்னியின் பாதங்களைத் தினமும் கண்ணாறக் கண்டு நமஸ்கரிப்பதைத் தவிர நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை”. என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான் அருமைத் தம்பி இலக்குவன். அன்றிரவு நகைகளை விலக்காமலேயே உறங்கினாள் சீதா தேவி. விடிகாலையில் அப்படியே நகைகளுடன் பர்ணசாலைக்கு வெளியே சென்றாள்.

நீண்ட, சோதனையான ஆண்டுகளாக, மூன்று நபர்கள் மட்டுமே காடுகளில் ஒன்றாக வாழ்ந்தபோது, ​​​​லக்ஷ்மணன் ராமர் மற்றும் சீதை இருவருக்கும் இடைவிடாத ஒழுக்கத்துடன் சேவை செய்வதைக் காண்கிறோம். இதிகாசமான ராமாயணம் ஒழுக்கத்தின் எல்லையோடு கூடிய மரியாதையின் பாடத்தை வீட்டிற்குச் சொல்லித் தருகிறது. லக்ஷ்மணன் தன் உன்னதத்தை காரணம் காட்டி,



                                   மன்னன் ரகுராமன்……


                                              பல்லவி

                        மன்னன் ரகுராமன் தன் மனையாள் ஜானகியை

                        அன்புடனேயழைத்து அணி மணிகள் புனையச்சொன்னான்

                                             அனுபல்லவி

                         சென்ன கேசவன் ஶ்ரீராமன் அதிசயித்து

                         உடனிருந்த தம்பியிடம் அதனழகைக் கேட்டதற்கு

                                                   சரணம்

                        அன்னையின் தோள் வளைகள் நானறியேன்

                        மின்னுமவள் மகர குண்டலங்கள் நானறியேன்

                        இன்னுமொளிவீசும் மெட்டி ஒன்றே நானறிவேன்

                        என்றுமவள் பொற்பாதம் பணிவதனாலென்றான்

                      

                                 


அனைத்துமானவளை…..

 

பிரம்மா தான் படைத்த எல்லா பொருட்களிலிருந்தும் சிறிதெடுத்து...சந்திரனின் குளிர்ச்சி..கொடியின் லாவகம்..புஷ்பத்தின் மென்மை..அழகு..மேகத்தின் நீர்..புலியின் ஆக்ரோஷம்..

கடல்..ஆகாயம் போன்ற பரந்த கருணை உள்ளம்...கடலின் ஆழம்...இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெண்ணை படைத்ததாக கூறுவர்.

ஆகவே பெண் ஸமஷ்டி ரூபிணிஎன்று துர்கா சப்த சதியிலும்..பல தேவதா சக்திகள் சமஷ்டியாக உருவெடுத்து வந்தவளே அம்பிகை என்றும் பழம் பெரும் நுல்களில் கூறப்படுகிறது. பெண்ணினத்தை.சக்தியை..பெண்மையை மதித்து போற்றிடுவோம்!


                          அனைத்துமானவளை…..


                                 பல்லவி

                 அனைத்துமானவளை அழகிய பெண்ணுருவை

                 ஆதிபராசக்தியை வணங்கித் துதித்தேன்

                               அனுபல்லவி

                 நினைத்தாலும் மகிழ்ச்சி தரும் கேசவன் சோதரியை

                 வினைப்பயன் நீக்கும் சிவகாமேச்வரியை

                                    சரணம்                       

                 நிலவின் குளிர்ச்சியும் கொடியின் லாவகமும்

                 மலரின் அழகுமதனின் மென்மையும்

                 புலியின் பாய்ச்சலும் வெறியும் கோபமும்

                 கடலாகயம் போல் பரந்த கருணை கொண்ட

Saturday, 28 October 2023

மகா கணபதியை…..

 மகா கணபதியை…..


              பல்லவி


  மகாகணபதியை மனமாரத்துதித்தேன்

  மகாதேவன் அகச்தீச்வரன் மகனை


                துரிதம்


கணங்கள், நந்தி, ந‌ரர் சுரர் ,நாரதர்

சுரபதி, ரதிபதி, தேவசேனாபதி

சரச்வதியின் பதி, பசுபதி,மற்றும்

சுகசனகாதியரனைவரும் வணங்கிடும்


             அனுபல்லவி


 சுகானுபவம் தரும் கேசவன் மருகனை

 அகார உகார மகாரப் பொருளை

    

                  சரணம்


 மகாபாபம் ரோகமிவை நீக்கி

 அகால மரணபயம் போக்கும் கரிமுகனை

 தகாத எண்ணங்கள் வருவதைத்தடுப்பவனை

 மகான்கள் வாழும் வையச்சேரி வளர்

இமவான் மகளே…..

 


                         இமவான் மகளே…..


                                     பல்லவி

                       இமவான் மகளே உமா மகேச்வரி

                       எமையாள வேண்டுமென உனையே துதித்தேன்

                                  அனுபல்லவி

                      அமரேந்திரனும் தேவரும் பணிந்திடும்

                      அமராவதியுறை கேசவன் சோதரி

                                      சரணம்

                      சமரம் செய்தரக்கன் மகிடனை மாய்த்தவளே

                      எமனையும் கலங்கச்செய்திடும் பைரவி

                      குமரன் கணபதி வணங்கிடும் தாயே

                      சம மெனத் தனக்கருவரில்லாத ஈச்வரி

                      

              

                       

Friday, 27 October 2023

புண்ணியனே…..

 தினம் ஒரு பாசுரம் -1:

உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெருமாயனே ! இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை ஆள்வானே

–திருவாய்மொழி

ஆழ்வார்களில் தலையாய நம்மாழ்வருக்கே, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசை சங்கடத்தை தருவதாய் அவரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?! இது ஒரு அற்புதமான பாசுரம்…. திருவாய்மொழியை சாமவேத சாரமாக அவதானிப்பதற்கு இது போன்ற பல திவ்யப் பாசுரங்கள் அதில் அமைந்திருப்பதே காரணம் என்பர்…..

பொருள் உரை:

அதாவது, திருக்குருகைப்பிரான், “நினைக்க/உணர இயலா மிகப்பெரிய மாயங்களை நடத்துபவனே! வெளியில் எனக்குப் பகைவர் என்றில்லாதபடி, என்னுள்ளேயே ஐம்புலன்கள் எனும் பகைவரைப் படைத்து, என்னை நலியவைத்து, உன் தாமரைப் பொற்பாதங்களை யான் அணுகாதபடிச் செய்கிறாய்! தேவர்கள் போற்றும், உலகம் மூன்றுக்கும் அதிபதியான, என் அண்ணலே, அமுதம் போன்று இனிமையானவனே, என்னையாளும் அப்பனே (இது நியாயமா?)” என்று பரமனைக் கேட்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.


  புண்ணியனே…..


           பல்லவி


புண்ணியனே உனைப் போற்றியுன் பதமே பணிந்தேன்

திண்ணியமாயெனக்கருள வேண்டுமெனத் துதித்து

             அனுபல்லவி


நண்ணியதுன் பதமே எண்ணியதுன் நாமமே

கண்ணியதுன் புகழே மண்ணிலனைத்தும் நீயே


                   சரணம்


எண்ணங்களுக்கடங்காத தத்துவங்களுடை

யவனே

விண்ணவரும் மண்ணவரும் வியந்தேத்தும் திருமாலே

அண்ணலே அமுதே அப்பனே கேசவனே

என்னுளே உள்ள ஐம்புலனாலாட்டுவிக்கும்

பார்கவி பரம கல்யாணி…….

                      


                         பார்கவி பரம கல்யாணி…….

                                     பல்லவி

                    பார்கவி பரம கல்யாணி  உனைப்பணிந்தேன்

                    நாற்கவிகள் போற்றும் திருவரங்கநாயகியே                

                                     துரிதம்

                   நான்முகன் நாரதர் சுகசனகாதியர்

                   வானுறை தேவர்கள் கானுறை முனிர்கள்

                   இந்திரன் சந்திரன் சூரியனனைவரும் 

                   வந்தனை புரிந்திடும் திருமகளே தாயே                 

                                    அனுபல்லவி

                   கார்வண்ண மேனியன் திருமால் கேசவன்

                   மார்பிலுறைபவளே மகாலக்ஷ்மியே

                                      சரணம்

                  போர் புரிந்தரக்கன் கோலாசுரனை

                  நேர் நின்றழித்தவளே நிர்மலமானவளே

                  பாற்கடலருளிய  பார் புகழ் கடல்மகளே 

                  சீர்மல்கும் திருவரங்கம் தனிலெழுந்தருளிய


                   

திருவண்ணாமலையானின்……

 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-

தீரனை, திரு அண்ணாமலையனை,

ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த

ஆரனை,---அடியேன் மறந்து உய்வனோ! 

One who is heroic, who consumed the poison, who removes the fear of the celestials, who dwells in tiruvaNNAmalai, one who owns the fertile fields, who destroyed the three cities of those enemies who did not realize his power, who wears the victory garland---can I survive if I forget him?


                    திருவண்ணாமலையானின்……


                                  பல்லவி

              திருவண்ணாமலையானின் திருப்பாதம் பணிந்தேன் 

              கருணாநிதியவனை மறந்து நானுய்வேனோ

                                   துரிதம்

              திருமால்,பிரமன்,இந்திரன்,சந்திரன்,

              முருகன்,கணபதி,நந்தி கணங்கள்,

              நாரதர், சுகசனகாதியரனைவரும்

              கரம் பணிந்தேத்துமரனெனுமீசனின் 

                              அனுபல்லவி              

              பெருமைக்குரிய கேசவன் நேசன்

              எருது வாகனன் எமனை உதைத்தவன்

                              சரணம்

               அருமறையுமமரர்களும் பணிந்தேத்துமரனின்

               கருவிலுருவாகாக் கருணாகரனின்

               பெருவிடமுண்ட நீலகண்டனின்

               குருவானவனின்  திரிபுரமெரித்தவனின்


              

              

               

               

Thursday, 26 October 2023

வடுவூரழகனை…..

 

🙏🏽ஸ்ரீ இராமபிரான் அலங்கார பிரியன்🙏🏽

" பார்த்த விழி பார்த்திருக்க " என்றவாறு விளங்கும் சுந்தரராமனின் திருஉருவினை கம்பர் அனுபவித்துக் கூறுவது மட்டுமின்றி, " அலங்காரப் பிரியனாக " உள்ள அத்திருமாலது அழகிற்கு அழகூட்டும் திருமணக் கோலத்தையும் கம்பர் அணுஅணுவாக இரசித்துப் புனைந்துள்ளார்.

அழகு என்பது பெண்மை உரு மட்டுமல்ல. ஆண்மைக்கும் அழகு உரியது. பெண்களை விட ஆண்களே அழகு என்பதற்கு சேவல், மயில், காளை, சிங்கம், போன்றவைகளே உதாரணம். சீதையின் அழகிற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இராமனின் அழகு என்ற கம்பரின் கூற்றிற்கு திருமலை பிரம்மோற்சவம் காட்சிகளே சாட்சி.

" அழி வரு தவத்தினோ டறத்தை யாக்குவான் 

ஒழி வருங் கருணையோ ருருவு கொண்டென 

எழு தரு வடிவுகொண் டிருண்ட மேகத்தைத்

தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே "

காப்பாற்றுவர் இன்றி அழிந்து வரும் தருமத்தையும், தவத்தையும் மீண்டும் வளர்த்திடுவதற்கு, கடவுளர்க்கு உரிய ஒரு அருளானது மனித வடிவம் எடுத்தது போல் எழுதுவதற்கும் அரிய (சித்திரத்தில்) வடிவத்தைப் பெற்று கரிய மேகத்தை நிலவு தழுவுவது போல் இராமனது மேனியில் கலவைச் சந்தனம் சார்த்தப்பட்டது என்று கம்பர் இராமனது திருமேனியில் சந்தனம் சார்த்தப்பட்டுள்ளதை வர்ணிக்கிறார். 


                                           வடுவூரழகனை…..


                                                       பல்லவி

                                      வடுவூரழகனைக் கோண்டராமனை

                                      இடுக்கண் களைந்திடும் கேசவனைப் பணிந்தேன்

                                                     அனுபல்லவி

                                      நடுக்கம் தீர்த்தவனை நரசிம்ம பிரானை

                                      படுத்துறங்கும் பாற்கடல்வாசனைப் பரந்தாமனை

                                                       சரணம்

                                      அடுத்து வந்த எனைத் தள்ளலாகாது   

                                      தடுத்து வந்தருள சமயமிதுவே  

                                      எடுத்த ஜனனம் கணக்கிலடங்காது

                                      மடுத்த எனைக் காக்க வேண்டுமெனத் துதித்து       

ஒருபோதுமகலாத……

 


                                     ஒருபோதுமகலாத……


                                            பல்லவி

                          ஒருபோதுமகலாத தாயரைத் திருமகளை

                          திருமார்பில் வைத்திருக்கும் கேசவனைத் துதித்தேன்

                                              துரிதம்

                           சுரபதி கணபதி தேவ சேனாபதி

                           ரதிபதி சரச்வதியின் பதி துதித்திடும்

                                         அனுபல்லவி

                          மருப்பொசித்த மாதவனை ஶ்ரீவாசுதேவனை

                          கருநிறத்தவனை கார்வண்ண மேனியனை

                                            சரணம்

                          இருபிறப்பாளரும் அமரரும் முனிவரும்

                          அருமறையுமனைத்து புராணங்களும் போற்றும்

                          அருமாகடலமுதனைக் கருணைக் கடலை

                          திருமால் ஶ்ரீமன் நாராயணனை


                         

                      

                          

                          

                           

Wednesday, 25 October 2023

அம்பிகை காமாக்ஷியை….




"கம்பைக் கரையில் சித்துருவாம் பூங்கொத்து உலவுகிறது. அது அறிஞர்களின் மனமாம் வண்டுகளுக்கு மகிழ்வைச் செய்கிறது! தானாகத் தோன்றிய மறை வாக்காம் காட்டுப் பாதையில் தொங்குகிறது! கருணை மதுவால் குளிர்ச்சி அடைந்திருப்பது. அசையும், அசையா உலகைப் படைக்கிறது".

மனோமதுகரோத்ஸவம் விதததீ மனீஷாஜுஷாம்

ஸ்வயம்ப்ரபவவைகரீவிபினவீதிகாலம்பினீ |
அஹோ ஶிஶிரிதா க்றுபாமதுரஸேன கம்பாதடே
சராசரவிதாயினீ சலதி காபி சின்மஞ்ஜரீ ||94||

मनोमधुकरोत्सवं विदधती मनीषाजुषां
स्वयम्प्रभववैखरीविपिनवीथिकालम्बिनी ।
अहो शिशिरिता कृपामधुरसेन कम्पातटे
चराचरविधायिनी चलति कापि चिन्मञ्जरी ॥94॥

                                  அம்பிகை காமாக்ஷியை….

                                            பல்லவி

                            அம்பிகை காமாக்ஷியை அனுதினம் துதித்தேன்
                            செம்பொன் மேனியன் சிவபெருமான் நாயகியை

                                          அனுபல்லவி
   
                            அம்புயநாபன் கேசவன் சோதரியை
                            வெம்பவக் கடலினை கடந்திடுமருள் வேண்டி

                                            சரணம்

                            கம்பாந்திக்கரையிலுலாவும் சித்துருவாம்
                            அம்பாளின் கூந்தலிலழகிய கருவண்டாய்த்
                            தெம்புடனே திரியுமறிஞரின் மனங்களை
                            கருணையெனும் மதுவால் குளிர்ச்சி பெறச்செய்த
                            
                            

Tuesday, 24 October 2023

வந்தனை புரிந்தேன்…..

 


माला सुधाकुम्भ विबोधमुद्रा विद्याविराजत्करवारिजाताम् ।
अपारकारुण्यसुधाम्बुराशिं श्रीशारदाम्बां प्रणतोस्मि नित्यम् ॥


                    வந்தனை புரிந்தேன்…..


                                         பல்லவி 

                      வந்தனை புரிந்தேன்  சாரதாம்பிகையை

                      எந்தனைக் காத்தருள  வேண்டுமென வேண்டி

                                      அனுபல்லவி

                      உந்திகமலன் கேசவனயனரன்

                      சந்ததம் துதித்திடும் சரச்வதி தேவியை

                                         சரணம்

                      சுந்தரக் கரங்களில் வீணை வைத்திருப்பவளை

                      மந்திரப்பொருளை கலைகளை வளர்ப்பவளை

                      விந்தையாய் லீலைகள் பல புரிந்தவளை

                      அந்தமுமாதியுமில்லாத பரம்பொருளை

                                          துரிதம்

                      கந்தன் கணபதி இந்திரன் நரர் சுரர்         

                      நாரதர் சுக சனகாதியர் மற்றும்

                      முனிவர்கள் வேதியரனைவரும் வணங்கிடும்

                      தனிப்பெருங்கடவுளை சரச்வதி தேவியை

                                    

                      

உனதருளே போதும்…..

 

                                          உனதருளே போதும்…..


                                                பல்லவி

                                   உனதருளே போதும் திருமகளே

                                   எனது வாழ்வை மகிழ்வுறச்செய்ய

                                               அனுபல்லவி

                                   அனங்கனைப் படைத்த கேசவன் துணைவியே

                                   தனம் புகழ் நல்வாழ்வு அனைத்தையும் தருபவளே

                                                  சரணம்

                                    ஜனகனின் மகளாய் வந்த ஜானகியே

                                    வனங்களில் ஶ்ரீராமனுடன் திரிந்தவள் நீயே

                                    உனக்கு நிகருலகில் வேறொருவர் உண்டோ

                                    தனலக்ஷ்மியே தாயே தயை புரிவாயே

கலைமகளே…..



                                     கலைமகளே…..

                                          பல்லவி

                     கலைமகளே கலைமகளே நீயென் பாடல் கேளாய்
                     அலைமகளும் மலைமளுமுனைப் போற்றுவதை நீ பாராய்

                                       அனுபல்லவி

                     கலைகளனைத்தையும் படைத்தவள் நீயே
                     விலை மதிப்பில்லாத பரம் பொருள் நீயே
      
                                          சரணம்
                     
                     நலந்தரும் கேசவனும் பிரமனும் சிவனும்
                     தலை வணங்கிடுமழகுக் கழலுடையவளே
                     நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளே
                     சிலையாகப் பூந்தோட்டம் பதிதனிலமர்ந்த