ஶ்ரீ சாமிநாதனை…..
ஶ்ரீ சாமிநாதனை…..
பனித்தலையர்…..
பல்லவி
பனித்தலையர் ஒருபாகத்துறைபவளை ஈச்வரியை
கனிந்தருள் புரிந்திட வேண்டுமெனத் துதித்தேன்
அனுபல்லவி
புனிதன் கேசவன் அன்பு சோதரியை
மனிதரும் தேவரும் முனிவரும் வணங்கிடும்
சரணம்
தனித்தே இருக்கும் தவத்தினளை
அனைத்தும் படைத்த அருங்குணத்தினளை
வினைப்பயன் பவநோய் களைபவளை
மனத்திலிருத்தி மலர்த்தாள் பணிந்தேன்
ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி
न जानामि पुण्यं न जानामि तीर्थ
न जानामि मुक्तिं लयं वा कदाचित् ।
न जानामि भक्तिं व्रतं वापि मातर्गतिस्त्वं
गतिस्त्वं त्वमेका भवानि ॥४॥
Know I not how to be righteous,
Know I not the way to the places sacred,
Know I not methods of salvation,
Know I not how to merge my mind with God,
Know I not the art of devotion,
Know I not how to practice austerities, Oh, mother,
So you are my refuge and my only refuge, Bhavani.
புண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!
பெண்ணிற் சிறந்தவளே……
பல்லவி
பெண்ணிற் சிறந்தவளே பேரழகே பவானி
கண்மணியே தாயே கடைக்கண்ணருள்வாயே
அனுபல்லவி
கண்ணன் கேசவன் சோதரியே கௌரி
வெண்ணிலவின் பிறையணிந்த ஈச்வரியே மாயே
சரணம்
புண்ணியச் செயலெதுவும் நான் செய்தறியே
புண்ணிய தலமெதுவும் என்றும் சென்றறியேன்
மண்ணிலிந்த பக்தியும் முக்தியும் நானறியேன்
எண்ணியுன் பதமலர் துதிப்பதன்றி வேறறியேன்
உருவாய்அருவாய்உளதாய்இலதாய். மருவாய் மலராய் மணியாய் ஔியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏
முருகா……
பல்லவி
முருகா திருமால் கேசவன் மருகா
வருவாய் வந்தருள் தருவாய் குகனே
அனுபல்லவி
குருவாயிருந்து திருவாய் மலர்ந்து
பெருமான் சிவனுக்கு மறை பொருளோதிய
சரணம்
பொருதி அரக்கன் தாரகன் உடலை
இருகூராக்கி சேவலும் மயிலுமாய்
அருகிலே இருத்திய வேலா குமரா
பெருமைக்குரிய ஆவினன் குடிவாழ்
சாமகானம்தனில்……..
பல்லவி
சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
சோமசுந்தரனை சிவனைத் துதித்தேன்
அனுபல்லவி
நாமமாயிரம் கொண்ட கேசவன் நேசனை
காமனை எரித்தவனை கபாலீசனை
சரணம்
மாமறைகள் புகழ்ந்தேத்தும் காமேச்வரனை
தாமரை மலர்க் கரத்தாள் மலைமகள் நாதனை
சோமஸ்கந்தனை ஆலமுண்டகண்டனை
பூமண்டலம் போற்றும் நமச்சிவாயனை
சதாசிவன் மகனை….
பல்லவி
சதாசிவன் மகனை முருகனை
சதா மனதில் துதித்தேன்
அனுபல்லவி
கதாதரன் கேசவன் மருகனை
பிதாவுக்கே வேதப் பொருளுரைத்தவனை
சரணம்
உதாரசீலன் வள்ளி மணாளனை
அதாகதம் செய்து தாரகனைக் கொன்றவனை
சதா துதித்திடுமடியார்கருள்பவனை
பதாரவிந்தம் பணிந்து பாடியே
நோக்கத்தில்…..
பல்லவி
நோக்கத்தில் நாமென்றும் குறியாயிருந்து
ஆக்கமுடன் செயலில் வெற்றிகொள்வோம்
அனுபல்லவி
நீக்கமற எங்கும் நிறைந்திருக்குமந்த
காக்கும் கடவுள் கேசவனருள் கொண்டு
சரணம்
காக்கையின் குத்தலைப் பொருட்படுத்தாது
யாக்கை வலியையும் பொறுத்தந்த பருந்து
ஊக்கமுடன் உயரே உயரே பறந்து
காக்கையை இறக்கச் செய்வது போலவே
அன்பினாலவளருள்……
பல்லவி
அன்பினாலவளருள் நாம் பெறலாம் - தூய
முன்பு நாம் செய்த பழவினை களையலாம்
அனுபல்லவி
துன்பம் பிணியிடர் கவலைகளனைத்தையும்
இன்பமுடன் வெல்லலாம் இவ்வுலகிலென்றும்
சரணம்
நன்மை தருமவள் நாமம் தினமும் துதித்து
வன்மம் தீய எண்ணமிவையனைத்தும் களைந்து
சென்மம் கடைத்தேற வேண்டுமென வேண்டி
தென் மதுரை வாழ் அங்கயற்கண்ணியின்
நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்....நெஞ்சினுள் நின் திருநாமம் வழிய வேண்டும்.....அனைத்தையும் கேட்காமலேயே கொடுக்கத்தெரிந்த உன்னிடத்தில் ...வேறு என்ன வேண்டுதல் இருந்துவிடப்போகிறது...மூச்சுள்ளவரை உன் சிந்தனை ஒன்றைத்தவிர.....வேறொன்றும் வேண்டேன் தாயே....மஹாமாரி ஜகதம்பிகே🙏🙏❤️❤️
மாரியே தாயே……
பல்லவி
மாரியே தாயே ஜகதம்பிகையே
பாரில் நீயன்றி வேறுயாரென் துணை
அனுபல்லவி
காரிருள் நிறத்தவளே கேசவன் சோதரி
சூரியனைப் பழிக்கும் சுடரொளியுடையவளே
சரணம்
சீரிளமை கொண்டவளே சிறிய யென்பிறைநுதலில்
காரிகை நீயருளும் மங்கல குங்குமமும்
மாரிலுள்ள நெஞ்சகத்திலுன் திருநாமமும்
கோரியே உனைத்துதித்தேன் வேறொன்றும் வேண்டேன்
'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
கார்முகில் வண்ணனை…..
பல்லவி
கார்முகில் வண்ணனைக் கண்ணனைக் கேசவனை
பார்புகழ் செம்பொன்னரங்கனைப்பணிந்தேன்
அனுபல்லவி
மார்பில் அல்லிமாமலராளைத் தாங்கும்
நான்மறைகள் போற்றும் திருநாங்கூர் தலத்தானை
சரணம்
நேர் நின்று துதித்திடுமடியார்களுள்ளத்தில்
ஊறுகின்றத் தித்திக்கும் தேனாய் விளங்கும்
பேறுடையானைக் களாப்பழ நிறத்தானை
கூறுமடியார்கள் பழவினை தீர்ப்பவனை
பேரணிந்து உலகத் தவர்தொழுதேத்தும் பேரருளாளன் எம்பிரானை*
வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளுமுடன் நிற்ப*
சீரணி மாட நாங்கை நன் னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே*
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டு உய்ந்தொழிந் தேனே.
ஸ்ரீதிருமங்கையாழ்வார் ♦ பெரிய திருமொழி 4.3.1
இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனம் செய்துகொண்டு அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய் எமக்கு ஸ்வாமியாய்ம ழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே, பெரிய பிராட்டியும் பூமிப்பிராட்டியும்கூடியிருக்க கண்டு கொண்டு ஸேவித்து உஜ்ஜீவித்துப்போனேன்.
பேர் அருளாளன் என்று பேர் பெற்றவனும் -எமக்கு ஸ்வாமியாய் -கார் காலத்திலேயே நீர் கொண்டு எழுந்த
காள மேகம் தான் இங்கனே ஒரு வடிவு எடுத்து நிற்கிறதோ என்னலாம் படி விளங்குபவனுமான
எம்பெருமான் இரண்டு பக்கலிலும் திரு மகளும் மண் மகளும் உடன் நிற்க இத் திவ்ய தேசத்திலே சேவித்து வாழப் பெற்றேன்
திருநாங்கூர்த் திருத்தலத்தில்……
பல்லவி
திருநாங்கூர்த் திருத்தலத்திலெழுந்தருளிக் காட்சிதரும்
செம்பொன்னரங்கனைக் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
இருவினைப் பயன்களகன்றிடச்செய்து
மறுபிறவியில்லாத நிலைபெற வேண்டி
சரணம்
பெருமழை சுமந்திருக்கும் கார்கால மேகமென
உருவம் கொண்ட திருமாலைக் கேசவனைப்
இருபுறம் மண்மகளும் திருமகளும் நின்றிருக்க
அருளமுதாய் விளங்கும் பேரருளாளனை
அமுதே... ஆராவமுதே... என் நெஞ்சை கொள்ளை கொண்ட அமுதனே!!
குடத்தை அமுதனுக்கு என்று தனியாக பாசுரங்கள் பாடாத திருமங்கையாழ்வார், எந்த திவ்ய தேசம் சென்று பாடினாலும் இடையிடையே , " அமுதே அமுதே " என்பார்.
இதனை திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் " ஆராவமுதனை அவ்வப்போது கூப்பிடுவார் " என்று சொல்லி ஆனந்திப்பார் . உபந்யாஸம் செய்யும்போது தொண்டை கமரினால் எப்படி இரண்டு திராக்ஷை போட்டுக் கொண்டால் ரஸம் ஊருமோ , அதுபோல் ஆழ்வாரும் க்ருஷ்ண ரஸம் நெஞ்சில் ஊற வேண்டும் என்றால், உடனே " அமுதே " என்று ஆராவமுதனை அழைப்பது வழக்கம்.
உலகத்துக்கே நாதனாக, முதல்வனாக இருக்கும் பெருமாள் தான் தங்குவதற்கு ஒரு இடம் தேடி அலைந்து நம் குடந்தையில் தங்கி இருக்கிறார் என்று ஆராவமுதனை காட்டுகிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வார் மன்கண்களால் அமுதனை எவ்விதம் பார்க்கிறார் என்றால்...அவரது தேஹம் மரகத வண்ணத்தில் இருக்கிறது அவரது உதடு பவள வண்ணத்தில் உள்ளது அவரது பல் வரிசை முத்து போல் உள்ளது அவரது பீதாம்பரம் தங்க வண்ணத்தில் உள்ளது.
பல வண்ண ரத்தினங்களை கோத்து ஒரு ரத்தின மாலை செய்து சேவை செய்ய அவசியமில்லாமல், ஸ்வயமேவ இப்படி பல வண்ணத்தில் பெருமாள் ரத்தின குவியல் போல ஜொலி ஜொலி இருக்கிறார் என கொஞ்சுகிறார். சுவையான பால் போலுள்ளாரே! என்று கொஞ்சலாமா? இவரை பற்றிப் பாடினால் உடல் இன்பத்துடன் புல்லரிக்கிறதே என்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன் எடுத்த தேன் போலல்லாமல் , இப்பொழுது பிழிந்த எடுத்த ' பச்சை தேன் ' போல இருக்கிறாரே என தேனுண்ட மயக்கத்தில் இருப்பவனைப்போல் கொஞ்சி மகிழ்கிறார்.
தங்கத்துடன்கொஞ்சம் தாமிரம் கலந்துதான் நகை செய்வர்... ஆனால் என்னப்பன் அமுதனோ பசும் பொன்னைப்போல் துளியும் கலப்படமில்லால் இருக்கிறாரே!! என்கிறார்.
பொதுவாக ஒவ்வொரு தெய்வத்துக்கு அர்ச்சனைக்கென்று உகந்த பூ உண்டு. இவர்கள் அனைவரும் தன் தலை உச்சியில் வைத்துக் கொள்ளும் பூ எது என்று கேட்டால். ....?
அனைத்து தேவர்களும் தன் உச்சியில் வைத்துக் கொள்ளும் பூவாக திருக்குடந்தை அமுதன் இருக்கிறாரே என்று சொல்கிறார் .
அழகான விஷயங்களை பார்த்தால் கிளியே, மானே, குயில் என கொஞ்சம் தோன்றும். ஆனால் இப்படி கொஞ்சம் பாக்கியம் எனக்கு திருக்குடந்தை ஆராவமுதனை பார்த்த பிறகு கிடைத்ததாம் ஆழ்வார்க்கு அவனை, தேனே, கரும்பின் தேனே என்று எவ்வளவு கொஞ்சினாலும் திருப்தி ஏற்படவில்லையாம் ஆழ்வாருக்கு!!!!
ஆராவமுதே அருந்தேனே……
பல்லவி
ஆராவமுதே அருந்தேனே
சாரங்கபாணியே திருக்குடந்தை வளர்
அனுபல்லவி
பேராயிரமுடைய திருமாலே கேசவனே
தீராவினை தீர்க்கும் திருவடி பணிந்தேன்
சரணம்
காரார் குழலாள் கோமளவல்லியை
பேரானந்தமுடன் மார்பினில் தாங்கும்
சீராளனே மானே அழகே குயிலே
பாரோர் பணிந்தேத்தும் பரமபதநாதனே
காரமர் மேனியனே தித்திக்கும் தெள்ளமுதே
ஊரார் கொண்டாடும் வண்ணப் பசும்பொன்னே
தேரேறி நின்றவனே வானவர் சூடும் பூவே
மாரனையீன்றவனே மரகதவண்ணனே
Koviladi(Thirupernagar) Appala Renganatha Perumal. 3867.
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழ்இசையின் சுவைதானே*
வண்ணநல் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.
The Lord beyond the intellect is inside my eyes. He is the subtle essence of the seven Svaras. The Lord of Tirupper is surrouned by jewel-mansions. He swells and fills my heart today
வண்ண மணிமாடங்கள் …….
பல்லவி
வண்ண மணிமாடங்கள் பல நிறைந்த திருப்பேரில்
அண்ணலப்பக்குடத்தானைக் கண்டு துதித்தேன்
எண்ணங்களாலே அளவிட முடியாத
கண்ணனைக் கேசவனை ஏழிசை நாயகனை
புண்ணியம் செய்தோர்கள் கண்ணெதிரில் காண்பவனை
விண்ணோரும் மண்ணோரும் வியந்து வணங்கிடும்
தண்மதி முகத்தோனைத் தாமரை நாபனை
திண்ணமுடனென் மனத்தில் புகுந்தாட்சி புரிபவனை
கந்தா கடம்பா……
கந்தா கடம்பா…..
பல்லவி
கந்தா கடம்பா கதிர்வேலா நீ
வந்தாட்கொள்வாயென உனை வேண்டி நின்றேன்
அனுபல்லவி
பந்தார்விரலி வள்ளி மணாளனே
உன் தாள் பணிந்தேன் கேசவன் மருகனே
சரணம்
எந்தாயீசன் சிவபெருமான் மகனே
நிந்தை புரிந்த சூரனுக்கருளிய
விந்தை புரிந்த வேலாயுதனே
உன் தயை தந்தெனைக் காத்தருள்வாயே
பார்த்தசாரதியை…..
பல்லவி
பார்த்தசாரதியை மனமாரத் துதித்தேன்
கீர்த்தி மேவும் திருவல்லிக்கேணி வளர்
அனுபல்லவி
பார்த்தனின் தேரை நடத்திய சாரதியை
கார்வண்ணமேனியனை கேசவனை மாதவனை
சரணம்
வார்த்தையிலடங்காத பேரழகுடையவனை
கூர்மமாயவதரித்து அமரருக்கமுதளித்தவனை
பாற்கடல் வாசனைச் சக்கரக் கையனை
பாரனைத்தும் போற்றும் ஶ்ரீமன் நாராயணனை
धन्वन्तरिस्तोत्रम् ३
ॐ शङ्खं चक्रं जलौकां दधदमृतघटं चारुदोर्भिश्चतुर्मिः
सूक्ष्मस्वच्छातिहृद्यांशुक परिविलसन्मौलिमम्भोजनेत्रम ।
कालाम्भोदोज्ज्वलाङ्गं कटितटविलसच्चारूपीताम्बराढ्यम
वन्दे धन्वन्तरिं तं निखिलगदवनप्रौढदावाग्निलीलम ॥ १॥
ॐ नमो भगवते महासुदर्शनाय वासुदेवाय धन्वन्तरायेः
अमृतकलश हस्ताय सर्व भयविनाशाय सर्व रोगनिवारणाय्
त्रिलोकपथाय त्रिलोकनाथाय श्री महाविष्णुस्वरूप
श्रीधनवन्तरी स्वरूप श्री श्री श्री औषधचक्र नारायणाय नमः ॥ २॥
इति श्रीधन्वन्तरिस्तोत्रं (३) सम्पूर्णम् ।
Him who) bears the conch, chakra, leech and Amruta-pot with four beautiful arms,
(Him whose) crown shines subtly yet brilliantly but very pleasingly, (him with) lotus-eyes,
(Him with a) body refulgent like a dark raincloud, (him whose) sloping hips are opulently adorned by shimmering, pretty yellow silk, That Dhanvantari, who ??? , I venerate
கருடன் சுமந்து வரும்….
பல்லவி
கருடன் சுமந்து வரும் திருமாலும் திருமகளும்
ஒரு சேரக்கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அருள் தரும் கேசவனும் அவர்தம் துணைவியும்
எனக்கருள வேண்டுமென திருவடி பணிந்து
சரணம்
தருமநெறி காக்க தரணியில் பல முறை
பெருமையுடன் அவதரித்த ஶ்ரீமன் நாராயணன்
இருவினைப் பயனகலச் செய்திட வேண்டுமென
கருநீலவண்ணனவன் திருவடி பணிந்து
பாடல் பல நூறு…..
பல்லவி
பாடல் பல நூறு உனைப்போற்றி நான் பாட
ஆடவல்லானே உன் அருள் வேண்டித்துதித்தேன்
அனுபல்லவி
தேடி உன்னடி முடி பிரமனும் கேசவனும்
நாடியும் கிடைக்காத ஆடிய பாதனே
சரணம்
வேடிக்கையாய்ப் பல விளையாடல் புரிவதை
வாடிக்கையாய்க் கொண்ட சிவபெருமானே
ஈடிணையில்லாத அகிலாண்டேச்வரனே
ஓடோடி வந்துன் மலரடி பணிந்தேன்
மரம்கெட நடந்துஅடர்த்து* மத்தயானை மத்தகத்து,*
உரம்கெடப் புடைத்து* ஒர் கொம்புஒசித்து உகந்த உத்தமா,*
துரங்கம்வாய் பிளந்து* மண்அளந்தபாத,* வேதியர்-
வரம்கொளக் குடந்தையுள்* கிடந்தமாலும் அல்லையே?
திருமழிசையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீகோமளவல்லிதாயார்ஸமேத ஶ்ரீசாரங்கபாணிபெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏
You crawled between the Arjunas and felled them like two blades of grass. You hit the rutted tusker on the head and broke his tusk with ease. You ripped the jaws of Kesin-horse; you took the Earth in single stride. You lie in cool repose, - a boon to Vedic seers in Kudandai.
பரந்தாமன் கேசவனை…….
பல்லவி
பரந்தாமன் கேசவனைக் குடந்தையில் கிடந்தவனை
சிரம் தாழ்த்தி கரம் பணிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பரகதி பெற வேண்டி த்துதித்திடுமடியார்கள்
அறவாழியந்தணர்களனைவரும் போற்றும்
சரணம்
மரங்களிரண்டின் நடுச்சென்றதை ப்பிளந்த
உரமுள்ள யானையின் கொம்பொன்றையொடித்த
அரக்கன் கேசியெனும் துரங்கம் தனை மாய்த்த
பரந்த பேரண்டங்களை மூவடியாலளந்த
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.
Her mother worries and says, "My daughter says,
‘You embrace lovely Lakshmi on your chest.’ She says, ‘You are my life.’
She says, ‘You are the beloved of the earth goddess whom you brought out from the underworld
taking the form of a boar and splitting open the earth.’ She says, ‘You conquered seven bulls
to marry the cowherd girl Nappinnai and you are her beloved husband.’
You stay in the temple of south Thiruvarangam.
I don’t understand what will happen to my daughter."
அலைகடல் நடுவே……
பல்லவி
அலைகடல் நடுவே பள்ளி கொண்டிருப்பவனே
அலைமகள் நாதனே கேசவனே உனைப்பணிந்தேன்
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனே
மலைத்து நின்றேன் உனதருளைப் புரியாமல் நானே
சரணம்
நிலமகளை ஏழ்கடலடியிருந்து மீட்டவனே
கலக்கம் தந்த அந்த ஏழெருதையழித்தவனே
நலந்தருமென் திருமகளை திருமார்பில் வைத்தவனே
உளமுவந்து தென்னரங்கம் தனில் கோயில் கொண்டவனே