அபிராமி
பல்லவி
நீயே வந்தென் உள்ளம் புகுந்தாய்
தாயே தாள் பணிந்து தஞ்சமடைந்தேன்
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரி
சேயெனக்குனையன்றி வேறு யார் துணை
சரணம்
தீயாய் நெருப்பாய் நிலனாய் நீராய்
மாயா வெளியாய் இருப்பவள் நீயே
ஓயாதுனையே துதிப்பவர்க்கெல்லாம்
தாயாய் தஞ்சம் தருமபிராமியே .
No comments:
Post a Comment