கார்த்திகேயன்
பல்லவி
முருகாவென்றொரு முறையழைத்தால் போதும்
இருகரம் நீட்டி ஓடோடி வருவான்
அனுபல்லவி
உருகி மனமாரத் துதிப்பவர்க்கெல்லாம்
அருள் மழை பொழிவான் ஆதரவளிப்பன்
சரணம்
கருணைக் கடலவன் கேசவன் மருகன்
சுருதியின் பொருள் சொன்ன சுவாமிநாதன்
குருவுக்கு குருவான கார்த்திகேயன்
பெருமைக்குரிய சிங்காரவேலன்
No comments:
Post a Comment