அத்திகிரியருளாளன்
பல்லவி
அத்திகிரியருளாளன் பதமலர் பணிந்தேன்
முத்தி பெற வேண்டியே பக்தியுடன் துதித்து
அனுபல்லவி
நித்திலத் தொத்தென்றும் அக்காரக்கனி என்றும்
பக்தர்கள் பணிந்தேத்தும் மாதவன் கேசவன்
சரணம்
வித்தகர் ஞானியர் வியந்து கொண்டாடும்
சத்தியமூர்த்தி கரம்பனூர் உத்தமன்
கத்தும் கடல் நடுவே பள்ளி கொண்டிருக்கும்
எத்திசையும் புகழ் விளங்கும் ஸ்ரீமன் நாராயணன்
No comments:
Post a Comment