சரவணபவன்
பல்லவி
அரசனும் நீயே ஆண்டியும் நீயே
சரவணபவனே பணிந்தேன் உனையே
அனுபல்லவி
கரன் முரனை வதைத்த கேசவன் மருகனே
மறைபொருளோதிய சுவாமிநாதனே
சரணம்
நரர்சுரரும் சுரபதியும் பசுபதியும் ரதிபதியும்
சரஸ்வதியின் பதியும் பணிந்தேத்தும் தேவனே
பரசமயம் விரும்பாத பக்தனெனையே
வரம் தந்தாட்கொள்ள வேண்டுமென துதித்தேன்
No comments:
Post a Comment