தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
அன்னை அபிராமி
பல்லவி
அருட்காட்சி யளித்திடும் அன்னை அபிராமியை
திருக்கடையூர் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கரும்பு வில்லையும் மலரம்பு தனையும்
இரு சிவந்த பொற் கரத்தில் அழகுடனேந்தி
சரணம்
திரிபுரம் தன்னைப் பொன்மலை வில்லால்
எரிசெய்த வனை கரிஉரி போர்த்திய
சிவனவன் திருமேனி தனைத்தன் கொங்கையால்
சோர்வுற ச்செய்த கேசவன் சோதரியை
No comments:
Post a Comment