கந்த கோட்டக்கந்தன்
பல்லவி
பறக்கும் மயிலேறும் முருகனைத் துதித்தேன்
பிறப்பிறப்பில்லா நிலை பெற விரும்பி
அனுபல்லவி
அறம் பொருளின்பம் அனைத்தையும் அளித்திடும்
பரம்பொருளானவனை தேவர்கள் தலைவனை
சரணம்
கறவைகள் மேய்த்திடும் கேசவன் மருகனை
உறவும் துணையுமவனெனப் பணிவோர்க்கு
நிறைவுடன் நலன் தரும் சிங்காரவேலனை
அறம் தழைக்கும் கந்த கோட்டத்துக் கந்தனை
No comments:
Post a Comment