தீனசரண்யன்
பல்லவி
ஆனைமுகத்தோனை அனுதினம் துதித்தேன்
ஞானக் கொழுந்தினை சங்கரன் மைந்தனை
அனுபல்லவி
மோனத்தவம் செய்யும் முனிவர்ரும் ஞாநியரும்
வானுறை தேவரும் யாவரும் போற்றும்
சரணம்
ஞானமும் செல்வமும் நல்வாழ்வும் கல்வியும்
கானரசாம்ருதமும் நானென்றும் பெற்றிட
தீனருக்கருள் தரும் தேவாதி தேவனை
பானை வயிற்றோனை கேசவன் மருகனை
No comments:
Post a Comment