திருப்பிரமாபுரம் :
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை :
ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.
பிரமாபுரம் சிவன்
பல்லவி
கண்ணுக்கினியானை உள்ளம் கவர்ந்தானை
கண் மூன்றுடையானை போற்றித் துதித்தேன்
அனுபல்லவி
விண்ணோர் பணிந்தேத்தும் பெருமைக்குரியவனை
மண்ணையுண்ட வாயன் கேசவன் நேசனை
சரணம்
பெண்ணுருவும் ஆணுருவும் ஒரு சேரக்காட்டும்
புண்ணியனை சடையோனை விடையேறும் சிவனை
நுண்ணறிவு தந்தென் எண்ணம் கவர்ந்தவனை
மண்ணுலகில் புகழ்மிகு பிரமாபுரம் நின்றானை
No comments:
Post a Comment