செந்தூர் சேவற்கொடியோன்
பல்லவி
முருகனை அழகனை குமரனைத் துதித்தேன்
இருகரம் கூப்பி திருவடி பணிந்து
அனுபல்லவி
கருநீல வண்ணன் கேசவன் மருகனை
திருநீலகண்டன் ஈசன் சிவன் மகனை
சரணம்
இருவினைப் பயன்களால் யான் படுந்துயர் நீங்க
கருணையுடன் எனக்கருள வேண்டுமென வேண்டி
திரு உலாவும் செந்தூர் பதிதன்னில்
பெருமையுடன் வீற்றிருக்கும் சேவற்கொடியோனை
No comments:
Post a Comment