ஆடுமழகை......
பல்லவி
ஆடுமழகைக் காணக் கண்ணாயிரம் வேண்டும்
நாடுமடியார்க்கு நலமளிக்கும் கேசவன்
அனுபல்லவி
வாடி துதித்த கரிக்குமபலைக்கும்
ஓடி வந்து துயர் துடைத்த மாயக் கண்ணன்
சரணம்
தோடும் குண்டலமும் தோள்வளையும் சங்கிலியும்
சூடிய நெத்திச் சுட்டியும் குலுங்கிட
வாடா மலர்மாலை மணிமாலை அசைந்தாட
கூடி நிற்கும் கோபியரும் சேர்ந்தே உடனாட
ஈடிணையில்லாத கோவிந்தனவனுடனே
காடுதனில் திரியும் மானும் மயிலுமாட
மாடும் கன்றுகளும் இடையர்களுமாட
பாடும் பறவைகளும் வானோருமாட
No comments:
Post a Comment