குமரன்
பல்லவி
பற்றினேன் குமரன் மலர்ப்பதம் தனையே
பற்றறுத்திடவே வேண்டுமெனத்துதித்து
அனுபல்லவி
உற்றதுணை அவனே கேசவன் மருகனே
கற்றவர் போற்றும் கார்த்திகேயனே
சரணம்
உற்றார் சுற்றமும் பெண்டிரும் பிள்ளையும்
பெற்றவரும் வீடும் விளைநிலமும் காடும்
கற்றகல்வியும் செல்வமும் நல்வாழ்வும்
மற்றேதுவும் சதமல்ல என்றறிந்தபின்னே
No comments:
Post a Comment