66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
அபிராமி (66)
பல்லவி
உன்னைப் பாடிப் பரவுதலன்றி
இன்னொன்றறியேன் எளியேன் சிறியேன்
அனுபல்லவி
என்பாடலில் குறை ஏதேனும் இருப்பினும்
நின்னருளால் பொறுப்பாய் கேசவன் சோதரி
சரணம்
பொன்மலை வில்லேந்தும் சிவனிடம் கொண்டவளே
முன்னைக்கும் முன்னைப் பழம்பொருளே மூத்தவளே
உன்னருள் இல்லையேல் உலகம் உய்யுமோ
அன்னையே அபிராமி என்னைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment