சரவணபவன்
பல்லவி
சரவணபவனை சேவற்கொடியோனை
சரணடைந்தேன் பவ வினைகள் களைந்தேன்
அனுபல்லவி
கரந்தனில் வேலேந்தும் அரன் மகனை
வரங்களை அடியார்க்கு வழங்கிடும் வேலனை
சரணம்
நரர்சுரரும் நான்முகனும் நந்தியும் கணங்களும்
கரம் பணிந்தேத்தும் தேவசேனாபதியை
குறமகள் வள்ளி தேவானை உடனிருக்கும்
முருகனை குமரனைக் கார்த்திகேயனை
அறம் பொருளின்பம் அனைத்துமளித்திடும்
நிரந்தரமானவனைக் கேசவன் மருகனை
மரணம் பிறப்பெனும் மாயச்சுழல் நீக்கும்
பரம்பொருளை பழனியாண்டவனை
No comments:
Post a Comment