திருவரங்கநாதன்
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் திருவரங்கநாதனை
பங்கய பதம் பணிந்து உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் முகத்தாளை திருவென்னும் பெயராளை
மங்களமாய்த் தன் மார்பில் வைத்திருக்கும் கேசவனை
சரணம்
கங்கையெனப் பாயும் காவேரி நடுவே
அங்கம் பரப்பிக் கிடந்திடுமரங்கனை
எங்ஙனம் மறவேன் அடியார்க்கடியேன் யான்
சங்கே நீ சொல்வாய் சக்கரமே நீ சொல்வாய்
No comments:
Post a Comment