சாரதி
பல்லவி
சாரதி நீயே கதியெனத் துதித்தேன்
சீரடி போற்றி சிந்தையில் வைத்து (பார்த்த )
துரிதம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
நரர்சுரரிந்திரனனைவரும் பணிந்திடும்
அனுபல்லவி
பாரதப்போரில் பார்த்தனுக்குதவிய
கார்மேகவண்ணனே மாலனே கேசவனே
சரணம்
ஆரமுதே அருளே பாற்கடல் துயிலும்
நாரணனே அனைத்திற்கும் காரணனே
மாறனைப் படைத்த மது சூதனனே
கோரசம்சாரக் கடலினக்கடந்திட
No comments:
Post a Comment