63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
அமுதீசர் நாயகி
பல்லவி
அமுதீசர் மனங்கவரும் அழகிய நாயகியை
அபிராம வல்லியை போற்றிப் பணிவாய்
அனுபல்லவி
கமலநாபன் கேசவன் சோதரியை
இமவான் மகளை திரிபுர சுந்தரியை
சரணம்
சமயங்களாறின் தலைவியை நற்கதிக்குச்
செல்லும் வழிசொல்லும் உமையவளைக் கண்டும்
வீணில் பரசமயம் உண்டென்று தேடும்
வீணரை மதியாமல் மனமே என்றென்றும்
No comments:
Post a Comment