கங்காதரன்
பல்லவி
கானப்ரியனை கங்காதரனை
தேனுபுரீச்வரனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வானுறை தேவரும் முனிவரும் கணங்களும்
நான்முகனும் நந்தியும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
கூனல் பிறையணிந்த மகாதேவனை
தேனார் மொழியாள் ஞானாம்பிகை போற்றும்
தானந்தமில்லாத தீனசரண்யனை
கானக்குழலூதும் கேசவன் நேசனை
No comments:
Post a Comment