Monday, 8 June 2015

கோளறு பதிகம்

                                    கோளறு பதிகம்
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
                                               பல்லவி

                         செம்பவள மேனியனை எம்பெருமான் சிவனை

                          அம்புலி கொன்றை அணிந்தவனைத் துதிப்போர்க்கு

                                               அனுபல்லவி

                           கொம்புடைய  எருதின் மேல் வெண் நீரணிந்து

                           அம்பிகை உமையோடு அழகுடன் பவனி வரும்

                                                   சரணம்
                         
                             அம்புயநாபன் கேசவன்  நாயகியும்

                              அம்புய மலரமர்  கலைமகளும் மற்றும்

                               எண்திசை தெய்வமும் துர்கையும் சேர்ந்து 

                               அனைத்து நன்மையையும் செல்வமும்  அளிப்பர் 

                                
                           

                              

No comments:

Post a Comment