விசித்திர வேழ முகன்
பல்லவி
விசித்திர வேழ முகத்தோனை கணபதியை
சித்திரத்தில் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
புசித்திட மோதகமும் அவல் பொரியும் விரும்பும்
சசி வர்ணக் கரிமுகனை கேசவன் மருகனை
சரணம்
தனக்குவமை இல்லாத தேவாதி தேவனை
வினை யிடர் களைந்திடும் விக்ன விநாயகனை
அனைத்துக்கும் முதலான ஆனைமுகத்தோனை
எனைக் காத்தருளென பாதம் பணிந்து
No comments:
Post a Comment